மதுரை வேலம்மாள் பொறியியல் கல்லூரியில் "புதியவர்கள் தினம் 22 " நடைபெற்றது.
மதுரை வேலம்மாள் பொறியியல் கல்லூரியில் 2022ம் ஆண்டுக்கான முதலாம் ஆண்டு மாணவர்களை வரவேற்கும் விதமாக "புதியவர்கள் தினம் 22 " நடைபெற்றது. மதுரை வேலம்மாள் பொறியியல் கல்லூரியில் 2022ம் ஆண்டிற்கான பொறியில் அனைத்து பிரிவு மாணவர்களுக்கும் "புதியவர்கள் தினம் 22" கல்லூரி காமராஜ் அரங்கத்தில் நடைபெற்றது.
கல்லூரி முதன்மை முதல்வர் சுரேஷ்குமார் மாணவர்களை வரவேற்று இஷ்டப்பட்டு படிக்க வேண்டும், கஷ்டப்பட்டு படிக்க கூடாது. எங்கு இருந்து வருகிறோம் என்பதல்ல எங்கு செல்கிறோம் என்பதுதான் முக்கியம் கிடைக்கும் வாய்ப்புகளை நீங்கள் பயன்படுத்தினால் இலக்கை அடையலாம் என குறிப்பிட்டார். வேலம்மாள் கல்லூரி குழும தலைவர் முத்துராமலிங்கம் குறிப்பிடும் போது மாணவர்களுக்கு இது முடிவல்ல ஆரம்பம். பெற்றோர்கள், மாணவாகள், பயிற்சியாளர்கள், நிர்வாகத்தினர் அனைவரும் இணைந்த ஒரு குழுவாக செய்யும் வேலை. இதில் யாரும் தனிப்பட்ட முறையில் செய்பட முடியாது. கூட்டு முயற்சிதான் வெற்றிபெறும். எங்கு ஆரம்பிக்கின்றோம் என்பது முக்கியமல்ல எப்படி பயணம் செய்கிறோம் என்பதுதான் முக்கியம்.
வேலம்மாள் பள்ளியில் படித்த 2 பேர் நீட் தேர்விற்கு கோச்சிங் படிக்காமல் 638 மார்க் எடுத் மதுரை மருத்துவ கல்லூரியிலும் மற்றொரு மாணவி தர்மபுரி மருத்துவ கல்லூரியில் படிக்கின்றனர். பிள்ளைகளை கல்லூரியில் சேர்த்ததோடு பெற்றோரின் கடமை முடிவடைவதல்ல. தொடர்ந்து அவர்களுடன் நல்லுறவில் இருக்க வேண்டும். கண்டிப்பு என்ற பெயரில் கஷ்ட படுத்தாமல் அவர்களை நண்பர்கள் போல் நடத்த வேண்டும். 3 நாட்கள் கல்லூரிக்கு வரவில்லை என்றால் வீட்டுக்கு கடிதம் வரும் உங்கள் பிள்ளைகளை பற்றி நீங்களும் தெரிந்துகொள்ள வேண்டும். மாணவர்களுக்கு படிப்பு என்பது மட்டுமல்ல விளையாட்டு, நூலகம்,போட்டி தேர்வுகள், சிறந்த பழகத்தைதரும்.
மாணவர்கள் தமிழ் ஆங்கிலம் மட்டுமல்ல பிற மொழிகளை கற்க வேண்டும். குறிப்பாக இந்தி கற்க வேண்டும் படிப்பு முடித்து இங்கு மட்மே இருக்ககூடாது வெளியூர் வெளிநாடு செல்லவேண்டும் சிவ நாடார், கூகுள் பிச்சை இந்திரா நூயி போன்றவர்கள் போல் நீங்களும் சாதனையாளராக வர வேண்டும். பெற்றோர்கள் பிள்ளைகளிடம் சிறிய மாற்றத்தை கூட கண்காணிக்க வேண்டும் இல்லேயேல் பெற்றோருக்கு இழப்பாத அமையும் நான்கு வருடங்கள் கஷ்டப்பட்டால் 40 வருடங்கள் நன்றாக வாழலாம் என வேலம்மாள் முத்துராமலிங்கம் கூறினார்.முடிவில் முதல்வர் அல்லி நன்றியுரை கூறினார்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
கருத்துகள் இல்லை