Header Ads

  • சற்று முன்

    கோவில்பட்டியில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் சிறப்பு முகாம் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது‌

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கோட்டத்தில் உள்ள விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம், கோவில்பட்டி ஆகிய 3 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை கோட்டாட்சியர் க.மகாலட்சுமி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் நேற்று முன்தினம் வெளியிட்டார். இதையடுத்து இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி, சிறப்பு சுருக்க முறை திருத்தம்  (9-ம் தேதி) முதல் டிச.8-ம் தேதி வரை நடைபெற உள்ளது. 12, 13, 26, 2 ஆகிய 4 நாட்கள் சிறப்பு முகாம் நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஜனவரி 1-ம் தேதி 18 வயது நிரம்பிய இளம் வாக்காளர்கள் பட்டியலில் சேர்க்க படிவம் 6-ல் பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம். மேலும், இறந்த, இடம் பெயர்ந்த மற்றும் இரட்டை பதிவு வாக்காளர்கள் நீக்கம் செய்ய படிவம் 7-ல் விண்ணப்பிக்கலாம். குடியிருப்பு மாற்றம், திருத்தம் செய்ய, நகல் அட்டை பெற, மாற்றுத்திறனாளிகளை குறிப்பிட படிவம் 8-ல் விண்ணப்பம் செய்யலாம். மேலும், nvsp.in.Voter helpline என்ற ஆன்லைன் மூலமாகவும் மற்றும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம் கருடா செயலியில் விண்ணப்பிகலாம், என கோட்டாட்சியர் க.மகாலட்சுமி தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில், சிறப்பு முகாம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கோவில்பட்டியில் விழிப்புணர்வு பேரணி நடந்தது. பயணியர் விடுதி முன்பு பேரணியை தேர்தல் துணை வட்டாட்சியர் கி.சங்கரநாராயணன் தொடங்கி வைத்தார். இதில், கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியின் நாட்டுநலப்பணித்திட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு வாக்களிப்பு என் உரிமை, ஜனநாயக கடமையை நிறைவு செய்வேன் உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி சென்றனர். பயணியர் விடுதி முன்பு தொடங்கிய பேரணி, பிரதான சாலை, புதுரோடு, எட்டயபுரம் சாலை வழியாக கோட்டாட்சியர் அலுவலகத்தில் நிறைவடைந்தது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad