Header Ads

  • சற்று முன்

    மதுரை மாவட்டம் தேனூர் ஊராட்சியில் குடிநீரில் கழிவுநீர் கலப்பதால் நோய் தொற்று பரவும் அபாயம்

    மதுரை மாவட்டம் மேற்கு ஊராட்சி ஒன்றியம் தேனூர் ஊராட்சிக்கு உட்பட்ட பேதார்சந்தை மற்றும் கட்டப்புளிநகர் பகுதிகளில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஊராட்சி மன்றத்தின் சார்பாக எந்த ஒரு பணியும் நடைபெறவில்லை என்றும் தெருக்களில் உள்ள குப்பைகள்  அகற்றப்படாமலும் , வீதிகளில் உள்ள சாக்கடை கழிவுகளை அகற்ற ஆளில்லாத நிலையும் ஏற்பட்டுள்ளதாக இந்த பகுதி பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். மேலும் கடந்த சில தினங்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக  குடிநீரில் கழிவுநீர் கலப்பதால் நோய் தொற்று பரவ வாய்ப்புள்ளதாகவும் தெருக்களில்  கழிவுநீர் ஆறாக ஓடுவதால் பொதுமக்களுக்கு சுகாதாரக் கேடு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் இது சம்பந்தமாக அப்பகுதி பொதுமக்கள் பலமுறை தேனூர்.ஊராட்சி நிர்வாகத்திடம் எடுத்துக் கூறியும் இதுகுறித்து கிராம சபை கூட்டத்தில் தீர்மானம்  நிறைவேற்றியும் எந்த ஒரு பணியும் நடக்கவில்லை என்றும் அந்தப் பகுதி பொதுமக்கள் கூறுகின்றனர்.



    மேலும் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதியான சாலை, கழிவுநீர் சாக்கடை போன்ற புதிதாக எந்த ஒரு பணியும் நடைபெறவில்லை என்றும் கூறி வருகின்றனர்.எனவே இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இதே நிலை தொடர்ந்தால் பொதுமக்களை ஒன்று திரட்டி பல்வேறு போராட்டங்கள் நடத்தப்படும் நிலை ஏற்படும் என்றும் சமூக ஆர்வலர்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.

    செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad