Header Ads

  • சற்று முன்

    ஆலங்காயம் அருகே விவசாயி நிலத்தில் மண் சம்மன் படுத்துவதற்கு லஞ்சம் கேட்கும் வருவாய் ஆய்வாளர்



    ஆலங்காயம் அருகே விவசாயி நிலத்தில் மண் சம்மன் படுத்துவதற்கு லஞ்சம் கேட்கும் வருவாய் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு.

    திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி தாலுகா ஆலங்காயம் அடுத்த நரசிங்கபுரம் பகுதியில் வசிப்பவர் விவசாயி குமரேசன்(45) இவர் 2007ல் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மேலாண்மை நிலம் வழங்குதல் திட்டம் மூலமாக வாங்கிய நிலத்தில் விவசாயம் செய்வதற்காக மண்ணை சமன் படுத்த முயற்சி செய்துள்ளார். இதற்காக அனுமதி கேட்டு வருவாய் ஆய்வாளர் தேவ குமாரனிடம் மனுவும் அளித்துள்ளார்.

    இது சம்பந்தமாக நேரில் சென்று ஆய்வு செய்த வருவாய் ஆய்வாளர் தேவகுமாரன் பின்பு இடைத்தரகர் ரஜினி மூலமாக மண் சமன் செய்ய வேண்டுமென்றால் 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கொடுக்க வேண்டும் என்று மறைமுகமாக கட்டாயப் படுத்தி மண் சமன் படுத்துவதை தடுத்து நிறுத்தியுள்ளார். இதனைத் தொடர்ந்து விவசாயி குமரேசன்  தன்னோடு சேர்ந்து பாதிக்கப்பட்ட சக விவசாயிகளுடன் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் தங்களுடைய சொந்த நிலத்தில் மண் சமன்படுத்த லஞ்சம் கேட்கும் வருவாய் ஆய்வாளர் மற்றும் இடைத்தரகர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி மனு கொடுத்தனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad