• சற்று முன்

    மூன்று தலைமுறையாக பயன்படுத்தி வந்த இடத்திற்கு தர வாடகை கேட்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு

    திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த குமாரமங்கலம் பகுதியில் குறவர் சமூகத்தைச் சார்ந்த பத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் மூன்று தலைமுறையாக வாழ்ந்து வருகின்றனர். தற்போது அப்பகுதியில் மாற்று சமூகத்தைச் சேர்ந்த சிலர் நாட்டாமையாக பொறுப்பேற்றதாக தெரிகிறது. இந்த நிலையில்  பலராமன், குருமூர்த்தி, உமாபதி, பிரகாஷ், மனோகர், முருகதாஸ், ராதாகிருஷ்ணன், எத்திராஜ், வெங்கடேசன், ஆகியோர் 
    பத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தாரை தற்போது அந்த இடத்தில் வசிக்க வேண்டும் என்றால் நீங்கள் வருடம் 15000 முதல் 30,000 வரை கொடுக்க வேண்டுமென வற்புறுத்தி வருவதாக தெரிகிறது. அது மட்டுமின்றி  அப்பகுதி மக்களுக்கு மின்சாரம், தண்ணீர், அடிப்படை வசதிகள் அனைத்தையும் துண்டித்து விடுவதாகவும் குற்றம் சாட்டினர். அதன் காரணமாக இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில் குறவர் சமூகத்தை சார்ந்த பத்திற்கும் மேற்பட்டோர் ஒன்றிணைந்து  அப்பகுதியில் வாழ விடாமலும் காலங்காலமாக வாழ்ந்து வந்த இடத்திற்கு தர வாடகை கேட்கும்  நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad