• சற்று முன்

    பல்லாவரத்தில் மத்திய மாநில அரசை கண்டித்து தேமுதிகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்

     

    பல்லாவரத்தில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த தவறிய மத்திய மாநில அரசுகளை கண்டித்து தே.மு.தி.க.சார்பில்  கண்டன ஆர்ப்பாட்டம் 

    செங்கல்பட்டு மாவட்டம் சென்னை பல்லாவரம் பேருந்து நிலையம் அருகில் செங்கல்பட்டு மாவட்டம் தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் சார்பில்  மக்கள் பாதிக்கக்கூடிய பெட்ரோல், டீசல், விலை கேஸ் சிலிண்டர் விலை கட்டுமான பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விலையேற்றத்தை கண்டித்து உடனடியாக விலைவாசி உயர்வை குறைத்திட வலியுறுத்தி மத்திய மாநில அரசுகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் செங்கல்பட்டு மாவட்டம் செயலாளரும் முன்னாள் சட்ட உறுப்பினருமான  அனகை. முருகேசன் தலைமையில் நடைபெற்றது. இதில் கேஸ் சிலிண்டர்க்கு மாலை அணிவித்து மத்திய மாநில அரசுக்கு  எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டது

    இந்த ஆர்ப்பாட்டத்தில் தேமுதிகவினர் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad