தினமும் பல்லாயிரம் லிட்டர் தண்ணீர் வீனாக ரோட்டில் விரையம் ஆகி வருவதை தடுக்க சி.பி.ஐ.யினர் நகராட்சி அலுவலகத்தில் மனு அளித்தனர் .
பவானி நகராட்சி 11 வார்டு, வர்ணபுரம் 4 வது வீதியில் கால்நடை மருத்துவ மனைக்கு எதிரில் நகராட்சி நிர்வாகம் கடந்த 13 வருடத்திற்கு முன்பு அமைத்து கொடுத்த போர்வெல் தண்ணீர் மேல்நிலை பிளாஸ்டிக் தொட்டியானது கடந்த 6 மாதமாக உடைந்த நிலையில் தினமும் பல்லாயிரம் லிட்டர் தண்ணீர் வீனாக ரோட்டில் விரையம் ஆகி வருவதாக முகநூல் தளத்தில் அந்த பகுதி சமூக செயற்பாட்டாளர் மணிகண்டன் அன்புராஜ் பதிவிட்டிருந்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நேரில் சென்று உடனடியாக கள ஆய்வு செய்து உடனடியாக பவானி நகராட்சி ஆணையாளருக்கு மனு அளிக்கப்பட்டது.
நகராட்சி பொறியாளர் இரண்டு நாட்களில் புதிய தண்ணீர் தொட்டி அமைத்து கொடுப்பதாக உறுதியளித்தார். சிபிஐ நகர செயலாளர் ப.மா.பாலமுருகன், வர்ணபுரம் 11 வது வார்டு பொறுப்பாளர் கார் ஸ்டேண்ட் சிபிஐ கிளை செயலாளர் கே.சரவணன், நகர குழு உறுப்பினர் கே.எஸ்.தனபால், Aiyf சரவணன், ஆகியோர் நேரில் சென்று மனு அளித்தனர் .
கருத்துகள் இல்லை