Header Ads

  • சற்று முன்

    வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு கோவில்பட்டியில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டார்.

    தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ளதால் தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவில்பட்டியில் 73 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. இந்த நிலையில் கோவில்பட்டி தினசரி சந்தை லாயல் மில் காலனி ஆகிய பகுதிகளில் மழைநீர் தேக்கமடைந்து உள்ளது. 

    தினசரி சந்தையில் மழைநீர் மற்றும் கழிவு நீர் வெள்ளம் என கரைபுரண்டு ஓடியது. இதனால் வியாபாரிகள் மற்றும் பொருட்கள் வாங்க வந்தவர்கள் என அனைவரும் பாதிக்கப்பட்டனர். லாயர்மில் காலனி பகுதியில் வெள்ள நீரால் பகுதி தீவு போன்ற காட்சி அளித்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் அவர்கள் தினசரி சந்தை பகுதி மற்றும் லாயல் மில் காலனி ஆகிய இரண்டு இடங்களையும் ஆய்வு மேற்கொண்டு இயந்திரங்கள் மூலம் நீர்வரத்து ஓடைகளை சுத்தம் செய்யவும் தொற்று ஏதும் ஏற்படாமல் இருக்க நகராட்சி நிர்வாகம் மூலம் கிருமிநாசினி தெளிக்கவும் நடவடிக்கை எடுக்க ஆட்சியர் உத்தரவிட்டார். 

    தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில் தற்போது வடகிழக்கு பருவமழை அதிகம் பெய்ய தொடங்கியுள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் 42 பம்பு மூலமாக தாழ்வான பகுதியில் தேங்கிய மழைநீரை அகற்றி பக்கிங் கால்வாய் வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது.பம்பு மூலமாக எடுக்க முடியாத இடங்களில் 6 லாரிகளை கொண்டு மழைநீரை அகற்றி வருகிறோம்.மேலும் 120 பம்புகள் தயார் நிலையில் உள்ளது. எங்கு மழைநீர் தேங்கினாலும் அகற்றப்படும். நீர்வரத்து ஓடைகளில் தூர்வாரப்பட்டு போர்க்கால அடிப்படையில் சுத்தம் செய்யப் போவதாகவும் தெரிவித்தார். பொதுமக்கள் இந்த மழை காலங்களில் சுடுநீர் அருந்தி நோய் ஏதும் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும் எனவும் அபாயமான பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் எனவும் ஆட்சியர் வேண்டுகோள் விடுத்தார். கொரோனா தொற்று தூத்துக்குடி மாவட்டத்தில் படிப்படியாக குறைந்து வருகின்றது. மழை காலம் என்பதால் ஏதெனும் அறிகுறி இருந்தால் தற்போது உள்ள காய்ச்சல் முகாம்களை சோதனை செய்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிறப்பு முகாமிற்கு எந்த ஒரு தேவையும் இல்லை ஏற்கனவே இருக்கும் முகாம்கள் சிறப்பாக செயல்படுகின்றன பரிசோதனை எண்ணிக்கையை குறைக்கவில்லை என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். முன்னதாக கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டத்தில் ஆட்சியர் கலந்துகொண்டார்.இந்த ஆய்வு கூட்டத்தில் கோவில்பட்டி கோட்டாட்சியர் விஜயா வட்டாட்சியர் மணிகண்டன் சுகாதாரத்துறை அதிகாரி அனிதா  நகராட்சி ஆணையர் ராஜாராம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad