144 தடை உத்தரவால் கோவில்பட்டி ஸ்ரீ செண்பகவல்லி அம்மன் திருக்கோவில் பங்குனி திருவிழா கொடியேற்றம் ரத்து - பக்தர்கள் இன்றி வெறிச்சோடி காணப்படும் நான்கு ரத வீதிகள்
கரோனா ஊரடங்கு உத்தரவினால் கோவில்பட்டி ஸ்ரீ செண்பகவல்லி அம்மன் திருக்கோவில் பங்குனி திருவிழா கொடியேற்றம் இன்று ரத்து - பக்தர்கள் இன்றி வெறிச்சோடி காணப்படும் நான்கு ரத வீதிகள்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ செண்பகவல்லி அம்மன் உடனுறை ஸ்ரீ பூவன நாத சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் பங்குனி மாதம் கடைசி வாரம் கொடியேற்றம் நடைபெற்று 12 நாட்கள் திருவிழா லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்புடன் மிக விமர்சையாக நடைபெறும். குறிப்பாக ஏப்ரல் 12ம் தேதி தேர்த்திருவிழா 14ஆம் தேதி நடைபெறும் தீர்த்தவாரி திருவிழாவை காண கோவில்பட்டி மட்டுமல்லாது அருகாமை நகரங்களிலிருந்தும் 5 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வருகை தந்து தரிசனம் செய்து விட்டு செல்வார்கள். தற்போது கரோனா வைரஸ் தாக்கத்தினால் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் கோவில்பட்டி ஸ்ரீசெண்பகவல்லி அம்மன் திருக்கோவிலில் இன்று நடைபெறவிருந்த பங்குனித் திருவிழா கொடியேற்றம் ரத்தாகி உள்ளது. மற்றபடி வழக்கம்போல் இந்து ஆகம விதிமுறைகளின்படி ஆறுகால பூஜைகள் மட்டும் சுவாமிக்கும் அம்பாளுக்கும் நடைபெற்று வருகிறது.
இந்த திருவிழா ரத்தான காரணத்தால் கோவிலில் தேர் சுற்றி வரும் நான்கு ரத வீதிகளும் வெறிச்சோடி பொலிவிழந்து காணப்படுகிறது. மேலும் கோவிலை நம்பி அங்கு அமைக்கப்பட்ட புக்கடை விளக்கு கடை புஜை பொருட்கள் விநியோகம் செய்யும் கடைகளும் புட்டப்பட்டு கலையிழந்து காணப்படுகிறது. இதுகுறித்து கணபதி சிவாச்சாரியார் கூறுகையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பிரசித்தி பெற்ற கோவிலான செண்பகவல்லிஅம்மன் கோவில் இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி பெறுந்திருவிழா வெகுவிமர்சையாக நடைபெறும். இன்று கோவிலில் கொடி ஏற்றப்படவேண்டிய தினம். இந்த தினத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடுவது வழக்கம். இந்த 10 நாட்கள் திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடி வெகு விமர்சையாக தேரோட்டம் தீர்த்தம் போன்ற நிகழ்வுகள் நடைபெறும். இந்த கரோனா காரணமாக தமிழக அரசு அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவில் தற்போது வெறிச்சோடி காணப்படுகிறது என்றார்.
கருத்துகள் இல்லை