Header Ads

  • சற்று முன்

    திருவண்ணாமலை மாவட்டத்தில் நரிக்குறவர்கள்- தொழுநோயாளிகளுக்கு இலவச உணவு கலெக்டர் ஏற்பாடு


    திருவண்ணாமலை ஏப்ரல் 5 திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவுதலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதுவரை 6பேர் கொரோனா வைரஸ் அறிகுறியுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது ஊரடங்கு  பிறப்பிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் தங்களது வீடுகளில் தனிமையில் இருந்து வருகின்றனர் .பொதுமக்கள் அத்தியாவசியமான பொருட்களை வாங்க வீட்டுக்கு ஒருவர் மட்டுமே வெளியில் வரவேண்டும் .வாரத்தில் இரண்டு நாட்கள் வெளியில் வந்து தேவையான பொருட்களை மொத்தமாக வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். சந்தைகளில் புதன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இறைச்சி விற்பனை நடைபெறும் என்றும் கலெக்டர் கந்தசாமி தெரிவித்துள்ளார் .


    தற்போது நிலவி வரும் அசாதாரணமான சூழ்நிலையில் அடித்தட்டு மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் நரிக்குறவர்கள் தொழுநோயாளிகள் தினமும் இலவச உணவு பெற பேட்டரி ஏற்பாடு செய்துள்ளார் .அதனை ஏற்று திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள சடை சாமி அறக்கட்டளை  தினமும் 500 பேருக்கு இலவச உணவு வழங்க முன்வந்துள்ளது .மெய்யூர், நாராயண குப்பம் பகுதி வசிக்கும் நரிக்குறவர் களுக்கும் தொழுநோய் இல்லத்தில் தங்கியுள்ளவர்களுக்கும் உணவு வழங்கப்பட்டு வருகிறது .தினமும் காலையில் உணவு சமைக்க வாகனம் மூலம் அந்தந்த பகுதிக்கு எடுத்துச் சென்று வழங்கி வருகின்றனர்


    இந்த பணியில் சமூக சேவகர் மணிமாறன் ,கார்த்திக், மணிகண்டன் மற்றும் ஏழ்மை போக்கும் தொண்டு நிறுவனத்தின் செயலாளர் சங்கர் ஆகியோர் ஈடுபட்டுவருகின்றனர். இந்த நிலையில் திருவண்ணாமலையில் வசித்து வரும் குரங்குகள், தெரு நாய்கள் உணவு கிடைக்காமல் தவித்து வருவதால
    அவை்களுக்கும் உணவு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad