Header Ads

  • சற்று முன்

    வேலூரில் தேர்தல் ரத்து கதறி அழுத அதிமுகவேட்பாளர்


    வேலூர் மக்களவைத் தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளதால் அங்கு போட்டியிட்ட அதிமுக கூட்டணியில் ஏ சி சண்முகம் கடும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளார்.

    வேலூர் தொகுதியில் கட்டுகட்டாக பெட்டி பெட்டியாகவும் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. திமுக சார்பில் வேலூர் தொகுதியில் போட்டியிடும் கதிர் ஆனந்த் உரிமையாளராக இருக்கும் கல்லூரியிலிருந்து இந்தப் பணம் காட்பாடி பகுதியில் உள்ள ஒரு குடோனுக்கு கொண்டு சென்ற பதிக்க வைக்கப்பட்டதும் உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து வருமானவரித் துறை அளித்த அறிக்கையின் அடிப்படையில் தமிழகத்தில் வேலூர் தொகுதியில் தேர்தலை ரத்து செய்யுமாறு குடியரசுத் தலைவர் தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்தது.

    தேர்தல் ஆணைய பரிந்துரையை ஏற்று வேலூர் தொகுதியில் எம்பி தேர்தலை ரத்து செய்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவை கேட்டதுமே வேலூரில் அதிமுக கூட்டணியில் போட்டியிடும் புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ சி சண்முகம் நெஞ்சைப் பிடித்துக்கொண்டு அப்படியே அமர்ந்து விட்டார். காரணம் கடந்த முறையும் பாஜக சார்பில்  போட்டியிட்டு 50 கோடி ரூபாய் வரை செலவு செய்து ஏ சி சண்முகம் தோற்றுப் போனார்.

    இந்த நிலையில் மீண்டும் அதிமுக கூட்டணியில் அதே வேலூர் தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட ஏசி சண்முகம் பெரும் முயற்சிக்குப் பின்பு வாய்ப்பை பெற்றார். இந்த முறை எப்படியும் வெற்றி பெற வேண்டும் என்கிற முனைப்பில் கடந்த முறை செலவு செய்ததை விட அதிக அளவில் பணத்தை ஏ சி சண்முகம் செலவு செய்திருந்தார். இதனால் வெற்றி உறுதி என்று ஏ சி சண்முகம் நம்பிக் கொண்டிருந்தார்.

    ஆனால் தேர்தல் ஆணையம் தேர்தலை ரத்து செய்துவிட்டதால் ஏசி சண்முகம் கடும் அதிர்ச்சியில் ஆழ்ந்ததுடன் கண்களிலிருந்து கண்ணீர் வரும் அளவிற்கதறியுள்ளார். மீண்டும் தேர்தல் அறிவித்தாலும் அதிமுகவிடம் சீட் வாங்கி போட்டியிட முடியுமா என்கிற கவலை தான் இதற்கு காரணம்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad