Header Ads

  • சற்று முன்

    சாயல்குடி பேரூராட்சியின் சுகாதார சீர்கேடு நடவடிக்கை எடுக்குமா ?


    சாயல்குடி பேருந்து நிலையம் அருகே அரசு பெண்கள் மேல் நிலை பள்ளி இயங்கி வருகிறது. இங்கு சுமார் 500க்கு மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த அரசு மேல் நிலை பள்ளியின் வளாகத்தின் பின் புறம் இரண்டாம் குப்பை சேமிப்பு கிடங்காக செயல்பட்டு வருகிறது. குப்பை கிடங்கிலிருந்து வரும் துர்நாற்றம் ஆசிரியர் முதல் மாணவிகள் வரை மூக்கை பிடித்து கொண்டு தான் இருக்கவேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.பல நேரங்களில் சில சமூக விரோதிகள் குப்பையை கொளுத்திவிட்டு சென்றுவிடுகின்றனர். அப்போது இதிலிருந்து வரும் புகை காற்றை மாணவிகள் சுவாசிப்பதால் சுவாசம் சம்மந்தப்பட்ட நோயால் பாதிப்புக்குள்ளாகின்றனர். மேலும் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த குப்பை கிடங்கு அருகில் பேரூராட்சி கழிப்பறை புதியதாக கட்டப்பட்ட நிலையில் பூட்டியே வைத்துள்ளனர்.


    பொது மக்கள் பயன்பாட்டிற்கு உதவாத கழிப்பறையால் திறந்த வெளியில் இயற்கை உபாதை கழிக்கும் அவலம் சாயல்குடி பொது மக்கள் அனுபவித்து வருகின்றனர். இந்த அவல நிலை போக்கி மக்கள் சுகாதாரத்துடன் வாழ சாயல்குடி பேரூராட்சி அதிகாரிகள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை வைக்கின்றனர்.

    செய்தியாளர் - சாயல்குடி - குமரேசன்

    செய்திகளை உடனுக்குடன் அறிய nms today.com பார்க்கவும் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad