• சற்று முன்

    டி..டி.வி.தினகரனுக்கே ஏதாவது வந்தால் காப்பாற்றுவதற்காக நாங்கள் தான் இருக்கிறோம் - எங்களை காப்பாற்ற யாரையும் தேடி செல்லும் அவசியம் இல்லை – அமைச்சர் கடம்பூர்.செ.ராஜீ


    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வட்டார போக்குவரத்து  அலுவலகத்துக்கு ரூ.2.60 கோடியில் புதிய கட்டடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. வட்டார போக்குவரத்து அலுவலக வளாகத்தில் நடந்த விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமை வகித்தார். தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ. ராஜூ சிறப்பு விருந்தனராக கலந்து கொண்டு புதிய கட்டட கட்டுமானத்துக்கு அடிக்கல் நாட்டினார்.

    தொடர்ந்து, கோவில்பட்டி நகராட்சியில் தூய்மை இந்தியா இயக்கம் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் ரூ.50.67 லட்சத்தில் வாங்கப்பட்ட 9 இலகு ரக வாகனங்களை அமைச்சர் தொடங்கி வைத்தார். பின்னர் காந்தி நகர் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் அனைவருக்கும் இடைநிலை கல்வித்திட்டத்தின் கீழ் ரூ.1.40 கோடியில் கட்டப்பட்ட புதிய கட்டடத்தை அமைச்சர் திறந்து வைத்து குத்துவிளக்கேற்றினார். முன்னதாக கோவில்பட்டி அருகே வானரமுட்டி ஊராட்சி ராமலிங்கபுரத்தில் ரூ.8.70 லட்சத்தில் கட்டப்பட்ட அங்கன்வாடி கட்டிடத்தினை அமைச்சர் தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சிகளில், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜீ, கோவில்பட்டி கோட்டாட்சியர் அமுதா, சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் மல்லிகா, வட்டார போக்குவரத்து அலுவலர்கள் சந்திரசேகர், மன்னர் மன்னன், ஆய்வாளர் அமர்நாத், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சுகுமார், உதவி செயற் பொறியாளர் அருள்நெறி செல்வம், உதவி பொறியாளர் பிரச்சன்னா, நகராட்சி ஆணையாளர் அச்சையா, நகராட்சி பொறியாளர் கோவிந்தராஜ், உதவி பொறியாளர் சரவணன், கல்வி மாவட்ட அலுவலர் மாரியப்பன், பள்ளி துணை ஆய்வாளர் செல்ல குருசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    இதனை தொடர்ந்து அமைச்சர் கடம்பூர்.செ.ராஜீ செய்தியாளர்களிடம் பேசுகையில் கோவில்பட்டியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களிடம் கூறும்போது, தூத்துக்குடியில் மத்திய அரசின் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் மற்றும் தமிழ்நாடு மின்வாரியம் சார்பில் ரூ.4 ஆயிரம் கோடியில் ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் அனல் மின் நிலையம் திறக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 2015-ல் தொடங்கப்பட்டு நடைமுறையில் இருந்தாலும் கூட, பணிகள் நிறைவு பெற்று முழு உற்பத்தி பெறுகின்ற நேரத்தில் தான் திறப்பு விழா நடத்த முடியும். அந்த வகையில் நேற்றைய தினம் அனல் மின் நிலைய திறப்பு விழா நடந்தது. இதுவரை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரியை பயன்படுத்தி வந்த நிலையை மாற்றி முழுவதுமாக நமது நாட்டிலேயே கிடைக்கக்கூடிய நிலக்கரியை நூறு சதவீதம் பயன்படுத்து நிலை உருவாக்கி திறப்பு விழா நடைபெற்றுள்ளது.

    மேலும் 150 மெகாவாட் சூரிய மின் உற்பத்தியும் துவங்குகின்ற விழாவும் நடைபெற்றது. ஆனால், இலக்கு 150 என்றால் அதனையும் மீறி 200 மெகாவாட் மின்சார உற்பத்தியை தொடங்கும் விழா இணைத்து நடத்தப்பட்டது. வரும் கோடை காலத்தில் தமிழகத்தில் மின்வெட்டே இல்லாத நிலைக்கு தூத்துக்குடியின் பங்கு மிக முக்கியமானதாக இருக்கும். மத்திய அமைச்சர் பியூஷ் கோயலின்  கவனத்துக்கு அந்தியோதயா விரைவு ரெயில் கோவில்பட்டி ரெயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும் என்ற மக்களின் கோரிக்கையை கவனத்திற்கு எடுத்துச் சென்றேன். உடனடியாக அந்த ரெயில் கோவில்பட்டி ரெயில் நிலையத்தில் நின்று செல்லும் என மேடையில் வைத்தே அறிவித்தார். மேலும், தென் மாவட்ட மக்களுக்கு கூடுதல் சேவைகள் மற்றும் முத்துநகர் விரைவு ரயிலுக்கு புதிய பெட்டிகள் மாற்றி தர வேண்டும் என்ற கோரிக்கை வைத்துள்ளேன், அதனை பரிசீலிப்பதாக கூறியுள்ளார். கோவில்பட்டி மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தினை தரம் உயர்த்த வேண்டும் என்று மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கவனத்திற்கு சென்ற போது அவர் வட்டார போக்குரத்து அலுவலகம் தரம் உயர்த்தி உத்தரவிட்டார். அதற்கு 2 கோடியே 60 லட்சம் மதிப்பில் கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டபட்டுள்ளது. காந்தி நகர் நகராட்சி பள்ளி நடுநிலைப்பள்ளியாக இருந்த போது முதல்வரின் கவனத்திற்கு எடுத்து சென்று கோரிக்கை வைத்தேன் இதனை தொடர்ந்து நடுநிலைபள்ளி, உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. அதற்கு தேவையான கட்டிடம் கட்டுவதற்கு 1கோடி 40 லட்ச ரூபாய் மதிப்பில் கட்டிடம் கட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

    அதிமுக தான் மக்களை காப்பாற்ற வேண்டும். டி..டி.வி.தினகரனுக்கே ஏதாவது வந்தால் காப்பாற்றுவதற்க நாங்கள் தான் இருக்கிறோம் தவிர எங்களை காப்பாற்றுவதற்கு யாரையும் தேடி செல்லும் அவசியம் இல்லை. தற்போதுள்ள அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ஜெயலலிதாவால் நிறுத்தப்பட்டு, அவரின் புகழ், திட்டங்களால் வெற்றி பெற்று, ஆட்சி அமைத்தார். அவர் மறைவுக்கு ஜெயலலிதா மறைவுக்கு பின்பு ஏற்பட்ட சூழ்நிலையில் தற்போதுள்ள முதல்வரை தேர்ந்தெடுத்து சட்டமன்ற உறுப்பினர்கள் தான், இந்த பதவி யாரூம் போட்ட பிச்சை கிடையாது. கடந்த சட்டமன்ற தேர்தலில் எந்த தொகுதியிலாவது பிரச்சாரம் செய்தவாரா ? டி.டி.வி. தினகரன், அவரை ஜெயலலிதா ஒதுக்கி வைத்திருந்தார்.இதில் 18 பேர் துரோகம் செய்து சென்றுள்ளனர். துரோகம் செய்தவர்கள் அவருடன் உள்ளனர். இதன் விளைவாக அவர்கள் அனைவரும் பதவியை இழந்துள்ளனர். இதற்கு தேர்தல் வரும்போது மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள். 

    தமிழகத்தில் பூரண மதுவிலக்கு சாத்தியப்படும். ஏற்கனவே 2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின்போது அதிமுக தேர்தல் அறிக்கையில், 2021-ம் ஆண்டுக்குள் தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கொண்டு வரப்படும் என ஜெயலலிதா தெரிவித்திருந்தார். தேர்தல் அறிக்கையில் கூறியதை நூறு சதவீதம் நிறைவேற்றக்கூடிய ஒரே அரசு அதிமுக அரசு தான். தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டது போன்று 1000 மது கடைகள் மூடப்பட்டுள்ளன. படிப்படியாக குறைத்து தேர்தல் அறிக்கையில் சொன்னது போன்று நிறைவேற்றப்படும். 

    இரட்டை இலை சின்னம் கேட்டு எத்தனை முறையீட்டுக்கு சென்றாலும், அதிமுக பெயர், கொடி எங்கிருக்கிறதோ அங்கு தான் சின்னம் வரும். இரட்டை சிலை எங்களுக்கு தான் சொந்தம். 

    ஸ்டெர்லைட் ஆலை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கண்டது அதிமுக அரசு தான். ஆனால் ஆலைக்கு அத்துணை உதவிகளும் செய்ததது திமுக அரசு தான். 1996-ம் ஆண்டு ஸ்டெர்லைட் ஆலை திறக்கும்போது திமுக ஆட்சி தான் இருந்தது. 2007-ம் ஆண்டு 245 ஏக்கர் அந்த ஆலை விரிவாக்கத்துக்கு கொடுத்தபோது தற்போதைய எதிர்கட்சி தலைவர் தான் அன்று தொழில்துறை அமைச்சராக இருந்தார். இதையெல்லாம் உத்தரவாக அரசின் நகலை, அடுத்த கூட்டத்தில் பத்திரிகையாளர்களை சந்திக்கும்போது கொண்டு வர தயாராக இருக்கிறேன். அதை மறுப்பதற்கு அவர்கள் தயாரா? என கனிமொழி கேளுங்கள், என்றார் அவர்.

    செய்திகளை உடனுக்குடன் அறிய nms today.com பார்க்கவும் 

    செய்தியாளர் : கோவில்பட்டி - சிவராமலிங்கம் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad