• சற்று முன்

    திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் சிவராத்திரி சிறப்பு பூஜை நடைபெற்று வருகிறது


    உலக பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் மகா சிவராத்திரி விழா கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. அந்தவகையில் இந்தாண்டு, இன்று சிவராத்திரி விழா மிக சிறப்பாக நடைபெறுகிறது.  இன்று அதிகாலை 3 மணிக்கு சிறப்பு பூஜைகள், 5 மணி முதல் பகல் 12 மணிவரை அண்ணாமலையார் சன்னதியில் லட்சார்ச்சனை நடைபெற்று மாலை 6 மணியளவில், கோயிலின் அனைத்து பிரகாரங்களிலும் லட்ச தீபங்கள் ஏற்றி ஆயிரகணக்கான பக்தர்கள் வழிபட்டு  பிரம்ம தீர்த்தம், சிவகங்கை தீர்த்தம் ஆகிய இடங்களில் தீபங்கள் ஏற்ற பாதுகாப்பு கருதி கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளன. 

    மேலும்,  இன்றயதினம் இரவு 7.30 மணி, 11.30 மணி, மறுநாள் அதிகாலை 2.30 மணி மற்றும் 4.30 மணிக்கு என்று மூலவருக்கு நான்கு கால பூஜைகள் மற்றும் அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். இதேபோல், மூலவர் கருவறைக்கு பின்புறம் அமைந்துள்ள லிங்கோத்பவருக்கு நள்ளிரவு 12 மணிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடைபெறும். 

    மகா சிவராத்திரியையொட்டி, திங்கள் காலை முதல் மறுநாள் காலை வரை கோயில் கலையரங்கில் பரதநாட்டியம், தேவாரப் பாடல்களின் இன்னிசை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும். மேலும் கோயில் ராஜகோபுரம் எதிரில் 108 தவில், நாதஸ்வர கலைஞர்களின் தொடர் இசை நிகழ்ச்சி ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 

    மகா சிவராத்திரியை முன்னிட்டு, அருணாசலேஸ்வரர் கோயிலில், பொது தரிசனம், கட்டண தரிசனம் மட்டுமே அனுமதிக்கப்படும். சிறப்பு தரிசனம், அமர்வு தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த விழாவில் 1000 கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து மலையை சுற்றி கிரிவலமும் வந்து ஸ்ரீஉண்ணாமுலை அம்மா உடனுறை ஸ்ரீஅண்ணாமலையாரின் அருளை பெற்று வருகின்றனர்

     திருவண்ணாமலை செய்தியாளர் .வி.முர்த்தி

    www.nms.today.com  பார்க்கவும் subcribe செய்யவும் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad