18 தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான அ.தி.மு.க. வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
பூந்தமல்லி தொகுதியில், ஜி . வைத்தியநாதனும், பெரம்பூர் தொகுதியில் ஆர்.எஸ்.ராஜேசும், திருப்போரூர் தொகுதியில், எஸ்.ஆறுமுகமும், சோளிங்கர் தொகுதியில் ஜி.சம்பத்தும் போட்டியிடுகின்றனர்.
குடியாத்தம் தொகுதியில், ஆர்.மூர்த்தியும், ஆம்பூர் தொகுதியில் ஜோதி ராமலிங்க ராஜாவும், ஓசூரில், முன்னாள் எம்.எல்.ஏ. பலகிருஷ்ண ரெட்டியின் மனைவி ஜோதி பாலகிருஷ்ண ரெட்டியும் களம் காண்கின்றனர். பாப்பிரெட்டிபட்டி வேட்பாளராக கோவிந்தசாமியும், அரூர் தொகுதி வேட்பாளராக வி.சம்பத்குமாரும், நிலக்கோட்டை தொகுதி வேட்பாளராக எஸ்.தேன்மொழியும், திருவாரூர் தொகுதி வேட்பாளராக ஆர். ஜீவானந்தமும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
தஞ்சாவூரில் ஆர். காந்தியும், மானாமதுரையில், எஸ்.நாகராஜனும்,ஆண்டிபட்டியில், லோகிராஜனும், பெரியகுளத்தில் எம்.முருகனும், சாத்தூரில், எம்.எஸ்.ஆர். ராஜவர்மனும், பரமக்குடியில் என்.சதன்பிரபாகரும், விளாத்தி குளத்தில், சின்னப்பனும் போட்டியிடுவதாக அ.தி.மு.க. அறிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை