Header Ads

  • சற்று முன்

    சர்க்கார் மறு தணிகை சான்றிதழ் பெற்றதாக கூறப்படுகிறது


    சன் பிச்சர் தயாரிப்பில் சர்க்கார் திரைப்படம் தீபாவளி அன்று தமிழகம் சென்னை உட்பட அனைத்து திரையரங்குகளில் வெளியானது. 

    படத்தின் இயக்குனர் முழுக்க முழுக்க தணிகை குழுவின் சரி பார்த்து சான்றிதழ் பெற்ற பிறகு திரைக்கு வந்தது. படத்தோட இயக்குனர் திரு, ஏ. ஆர்.முருக தாஸ் நடப்பு தமிழக அரசியலை தெள்ளத்தெளிவாக மக்கள் புரிந்து கொள்ளும் வகையில் திரைப்படம் தந்துள்ளார்.

    தீபாவளி கழித்து அதிமுக தொண்டர்கள் ஜெயலலிதாவையும், சசிகலா விமர்சித்ததாக நினைத்துக்  கொண்டு திரையரங்குகளில்  விஜய் படத்தின்  கட்டவுட் பேனர்களை கிழித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.  சர்கார் திரைப்படத்தில் ஜெயலலிதாவின் இயற்பெயர் என்று கூறப்படும் கோமளவல்லி என்ற பெயர் எதிர்மறையாக பயன்படுத்தப்பட்டிருப்பதாக  புகார் கூறப்படுகிறது. அதிமுக அரசின் விலையில்லா பொருட்கள் வழங்கும் திட்டங்களை கொச்சைப்படுத்தும் வகையிலும், அவற்றை கொளுத்தும் வகையிலும் காட்சிகள் உள்ளதாக அதிமுக-வினர் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.இந்த காட்சிகளை நீக்க வேண்டும் என்று அமைச்சர்கள் வலியுறுத்திய நிலையில், அதிமுகவினர் போராட்டங்களிலும் ஈடுபட்டனர். இதனால் தமிழகத்தில் சர்கார் படத்தை திரையரங்குகளில் வெளியிட முடியாத நிலை உருவானது.

    இந்த நிலையில் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க சர்கார் படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் ஒப்புக் கொண்டதாக தகவல் வெளியானது- மேலும் நீக்கப்பட்ட காட்சிகளுடன் படத்திற்கு மறுதணிக்கை சான்றிதழ் கோரி, சர்கார் படத் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில், மத்திய திரைப்படத் தணிக்கைக் குழுவுக்கு விண்ணப்பிக்கப்பட்டது.

    இதன் அடிப்படையில், சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்ட சர்கார் திரைப்படத்திற்கு மறுதணிக்கை சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. சென்னை சாஸ்திரி பவனில் உள்ள, மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியத்தின் மண்டல அலுவலர் லீலா மீனாட்சி மறுதணிக்கை சான்றிதழை வழங்கியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. 


    செய்தியாளர் - பொன் முகரியன் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad