Header Ads

  • சற்று முன்

    எம்.டி.எச் சாலையா உயிர் பறிக்கும் நெடுஞ்சாலையா ?


    சென்னை  திருவள்ளுர் ஆவடி மெயின் ரோட்டில் திருநின்றவூரில் அமைந்துள்ள டாடா இரும்பு எஃகு ஆலையின் குடோன் அமைந்துள்ளது. இந்த குடோணிற்கு தினந்தோறும் சராசரி 100 வாகனத்திற்கு மேல் வந்து செல்கின்றன. இதனால்  சாலைகள் ஒரு கிலோ மீட்டர் தொலைவு வரையிலும் உயிரை பறிக்கும் குண்டும் குழியுமான  பள்ளங்கள் காணப்படுகின்றன. கனரக வாகனங்கள் போக்குவரத்து அதிகமாக இருப்பதால்  சாலையில் மரணத்தை சம்பவிக்கும் அளவிற்கு சாலைகள் காணப்படுகின்றன. பகலில் வாகன ஓட்டிகள் செல்லவே அச்சப்படும் நிலையில் இரவில் சொல்லவே தேவையில்லை. உயிரை கையில் வைத்து தான் செல்ல வேண்டியிருக்கிறது. குண்டும் குழியுமான சாலை மெதுவாக செல்லவும் என்று பதாகைகள் வைப்பதைவிட இந்த சாலையில் சென்றால் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்று பதாகைகள் வைக்கலாம் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். 

    மேலும் அந்த குடோனில் பணிபுரியும் அதிகாரிகளை கேட்டால் அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து இருக்கிறோம் அவர்களை போய் கேளுங்கள். 

    லஞ்சம் வாங்கிய அதிகாரிகளை கேட்பதா ? அல்லது வாக்களித்து தேர்ந்தெடுத்த அமைச்சரை கேட்பதா என்று தத்தளிக்கும் பொது மக்கள் மற்றும் வாகன ஒட்டி பயணிகள் விபத்துகளை தவிர்ப்பதும் பொது மக்களுக்கு சௌகரியங்கள் செய்து கொடுப்பதும் அரசிடம் உள்ளது என பொது மக்கள் சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர். 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad