Header Ads

  • சற்று முன்

    இளம் நாயகர்களுடன் இணையும் நயன்தார


    நயன் தாரா, லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் தென்னிந்திய நடிகை. 2003 ஆம் ஆண்டு இயக்குநர் ரஞ்சன் ப்ரமோட் இயக்கத்தில் மனசினக்கரே என்ற மலையாள படத்தில் அறிமுகமானார். 2005 ஆம் ஆண்டு இயக்குநர் ஹரி இயக்கத்தில் சுப்ரீம் ஸ்டார் சரத் குமாருக்கு ஜோடியாக அய்யா என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானர். தன்னுடைய 15 வருட திரை வாழ்க்கையில் தமிழ் தெலுங்கு மலையாளம் மற்றும் கன்னடம் உட்பட 66 படங்களில் நடித்துள்ளார். கடந்த 2017 ஆம் ஆண்டு இயக்குநர் மோஹன் ராஜா இயக்கத்தில் இளம் நாயகன் சிவ கார்த்திகேயனுக்கு ஜோடியாக இவர் நடித்து வெளியான படம் வேலைக்காரன். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமின்றி வசூல் சாதனையும் செய்தது.


    இன்று நேற்று நாளை என்ற படத்தை இயக்கிய இயக்குநர் ரவிக்குமார் ராஜேந்திரனின் அடுத்த படத்தில் நடிக்கவிருந்தார் நடிகர் சிவ கார்த்திகேயன். ஆனால் இந்த படத்திற்கு முன்பாக சிவா மனசுல சக்தி, பாஸ் எங்கிற பாஸ்கரன் போன்ற படங்களை இயக்கிய இயக்குநர் எம்.ராஜேஷின் இயக்கத்தில் ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் நடிகர் சிவ கார்த்திகேயன். இப்படத்தில் நடிகர் சிவ கார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை சாய் பல்லவி நடிப்பதாக இருந்தது.


    ஆனால் சமீபத்தில் வந்த செய்திகளின் படி இப்படத்தில் நடிகை சாய் பல்லவி நடிக்கவில்லை என்றும், அவருக்கு பதிலாக லேடி சூப்பர் ஸ்டார் நயன் தாராவை இப்படத்தில் நடிக்க வைக்க படக்குழு முடிவு செய்திருப்பதாகவும் செய்திகள் வெளியாயின. ஏற்கனவே கடந்த ஆண்டு நடிகை சிவ கார்த்திகேயனுக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன் தாரா நடித்து வெளியான படம் வேலைக்காரன். இப்படத்தில் சிவ கார்த்திகேயனை விட நயன் தாரா வயதில் மூத்தவர் போல தோன்றுகிறார் என பலதரப்பட்ட ரசிகர்கள் கிண்டலடித்தனர். இந்நிலையில் இவர்கள் மீண்டும் ஜோடி சேர்வதை ரசிகர்கள் எப்படி எடுத்துக்கொள்வார்கள், இயக்குநர் ராஜேஷ் நயன் தாராவை திரையில் எப்படி காட்டப்போகிறார் என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad