Header Ads

  • சற்று முன்

    கேரளா மக்கள் நலன் வேண்டி மதுரை திருமங்கலத்தில் பக்தர்கள் முளைப்பாரி எடுத்தனர்



    மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் உலக நன்மை பெற வேண்டியும் கேரளா மக்களை பாதுகாக்க வேண்டும் ஓம் சக்தி கோவில் பக்தர்கள் முளைப்பாரி எடுத்தும் கஞ்சி கலையம் ஏந்தியும் வழிபாடு. செய்து வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது


     மதுரை மாவட்டம் திருமங்கலம் நகரில் இன்று ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்களும் ஆண்களும் அருள்மிகு ஓம் சக்தி அம்மன் கோவிலில் இருந்து முளைப்பாரி எடுத்தும் கஞ்சி கலையம் தலையில் தாங்கியும் திருமங்கலம் நகர் முழுவதும் வீதி உலா வந்து தரிசனம் செய்தனர். தற்பொழுது இயற்கை மழை வெள்ள சீற்றத்தினால் மூழ்கடிக்கப்பட்டு இருக்கும் கேரள மக்களை காப்பாற்ற வேண்டியும் உலக நன்மை பெற வேண்டியும் ஓம்சக்தி பக்தர்கள் அனைவரும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் ஒன்றிணைந்து திருமங்கலம் நகர் முழுவதும் முளைப்பாரி எடுத்தும் கஞ்சி கலயம் தாங்கியும் ஊர்வலமாக சென்றனர் இவ்வூர் வலத்தில் சாமிகளின் மாறுவேடத்தில் தசாவதார உருவத்தில் ஊர்வலமாக நடந்து சென்று தரிசனம் செய்தனர்

    இத்திருவிழாவில் ஏராளமான பெண்கள் ஆர்வத்துடன் கலந்து வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது

    1 கருத்து:

    1. *வைகை அணையில் திறக்கப்பட்ட தண்ணீர் வீணாக கடலில் கலக்காமல் மதுரை மாவட்டத்தில் உள்ள கூத்தியார்குண்டு கண்மாய்,தென்கால் கண்மாய்,மாடக்குளம் கண்மாய்களின் நீர் வழித்தடங்கள் சீரமைக்கப்பட்டு அனைத்து கண்மாய்களிலும் தண்ணீர் நிரப்பப்பட்டு விவசாயிகள் பயன்பெற வழிவகை செய்ய மதுரை மாவட்ட ஆட்சியர் அவர்கள் உத்திரவிடவேண்டும் என விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்*

      செய்தி : மதுரை சு.வடிவேலன்.

      பதிலளிநீக்கு

    Post Top Ad

    Post Bottom Ad