Header Ads

 • சற்று முன்

  என்னைக் கொல்லாதே ......... முன் கதை 14.08.18 தேதியில் பார்க்கவும்


  இப்படியும்  அப்படியும் ஆடிய கால்கள் முடங்கிப் போனது எலுமிச்ச நிறம் கண்ணி பழுப்பேறியது. ராகினி ஆன்டியா ,ஐயோ சாமி கொடுமைடா இது. அருகில் நின்றிருந்த அன்னம் தேம்மினாள். இராத்திரி என்ன நோவு வந்ததோ, எதை பேசணும்னு  மனசுக்குள்ள நினைச்சாங்களோ  அதுக்குள்ளே எமன் வந்துட்டானே  என்று புலம்பினாள்  . எட்ட நின்ற காந்தன் அருகே சென்றான்  கூடத்தில்  படுத்துவளின் முகத்தில் சாந்தம்  இல்ல

   அச்சத்தில் கண்களை இறுக்கமாக மூடி தூங்குவது போல கிடந்தாள். அவ்வளவு அவசரம் என்னவோ  குழந்தைகளுக்காக தேடித்தேடி சலிப்படையாமல்  ஆசையா ,சுவையா செய்த குலோப்ஜாமூன் அப்படியே கிடக்கு ஆனால்; நீங்க மட்டும் பறவையா உசிரை எடுத்துட்டு பறந்துட்டிங்களே என் இதயம்  பாம்  வைத்து சிதறும் மலையாக தூள் தூளாக வெடிக்குதே உங்களையே உலகமென சுற்றிய என்னையும், நீலேஷை மறந்திட்டிங்களே நெஞ்சிகுள் கதறியவன்  மெதுவாக ஆன்டியின்  வலது முழங்கை மீது கை வைத்தான். பின்பு மெல்ல கையை எடுத்து தனது இரு கரங்களுக்குள் வைத்து பாசமுடன் அழுத்தினான்.   சில்லிட்ட உடலில் வித்தியாசம் உணர்ந்தான்.   ஒகாட் விரலில் மோதிரம் தென்படவில்லை.  ஒரு வேளைஅம்மா... பத்திரப்படுத் திருப்பாங்க்களோ பரவவில்லை  பின்பு கேட்கலாம். என எண்ணினான்.அடுத்த இரண்டு மணி நேரத்தில் ஈம காரியங்கள் நடந்தது. மெஷின் எரிப்பதால் கொள்ளி வைக்க உறவுகளோ  தயவோ தேவையில்லாமல் போயிற்று. அன்று மதியம் அம்மாவிடம் ஆன்டி  போட்டிருந்த மோதிரம் என வாய் திறந்ததும்  நீ எடுத்து வைத்தாயா  நானே உன்னிடம் கேட்க நினைத்தேன் சடாரென்று உடம்புக்கு என்ன நோய் வந்து பாடாய் படுத்தி இருக்கும். நிச்சயம் நான் எடுக்கல மோதிரத்தை நான் ஆன்டியை பார்க்கும் போதே விரல்ல இல்ல நீங்க .... கழற்றி இருக்கலாம் என தோனிச்சி காந்தாஇருஅப்புறம் தேடலாம் கொஞ்சம் ரெஸ்ட் எடு.எனக்கூறி மகனை அனுப்பி விட்டு அவளும் ஓய்வு எடுக்க போனாள்  மனம் நிம்மதி இன்றி துடித்தது. எங்கே வெச்சி இருப்பாங்க ம்ம் தீடீரென்று   அந்த பெண்ணின் நிழல் கண்ணுக்குள்ளே நின்று சிரித்தது. நினைவை உதறிவிட்டு ஆன்டி வீட்டிற்குச் சென்றான்.

  அடுப்பறையில் குலோப்ஜாமூன் தூக்கைத் தேடினான். அது காணாவில்லை. நெற்றியை தடவினான். அங்கிருந்த சோபாவில் அமர்ந்தான். ஒரு வித அமைதி பீதியை ஏற்படுத்தியது பொன் மகள் வந்தாள் பொருள் கோடி தந்தாள் பாடல் காதுக்குள் சத்தமாக ஒலித்தது. அம்மா....ம்மா...ம்மா கத்தினான் குரல் எழும்பவில்லை.  அந்த பக்கம் சென்றவர் மகன் தனியாக இருப்பதைக் கண்டு உள்ளே நுழைந்தார். காந்தா இங்கே என்ன செய்ற மெந்த மெந்த விழித்தவனை கரம் பற்றி அழைத்துச் சென்றார். பாவம் காந்தன் ராகினியின் மறைவு மகனுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது சிறிது காலம் போனால் தன்னால் சரியாகும் அதுவரை  அவன் மீது கவனம் செலுத்த வேண்டும். மகனுக்கு  ஆதரவாக தோளில் தட்டி  தைரியம் புருஷ லட்சணம் கஷ்டம் வரும் போது துவண்டு போகக்கூடாது  பிறந்தவங்க எல்லாரும் ஒருநாள் போயி  சேரவங்கதான்  செத்தபேயைக் கண்டு அழும் பேய்கள் என்று பட்டினத்தார் சொன்னார்..

   என்ன அல்பாயுசுல போயிட்டாங்க விடு மனசை தேத்திக்கோ சமாதானம்செய்து நகர்ந்தார். அவர் அப்படி போனதும் மீண்டும் யோசனையில் ஆழ்ந்தான்  ஆன்டி மோதிரம் காணாம் குலோப்ஜாமூன் காணாம்  யாரு வந்திருபாங்க புரியில்லையே குழம்மினான். நேற்று  இரவு இருந்தவங்க காற்று அடிக்கும் வேகத்துல மறைந்தாரு ஹாட்ஹடாக் வந்திருக்குமோ பற்பல எண்ணி தவித்தான். இரவும் வந்தது படுக்க முடியாமல் சுனங்கினான் நேற்று நாய்கள் ஊளையிட்டது ஆன்டியின் மரணத்திற்காகவா எமன் நேற்று வீட்டிற்கு வந்திருப்பானோ நாய்களின் கண்களுக்கு தெரியுமாமே அப்படி என்றால் மெல்ல ஆன்டி அமர்ந்த இடத்தை கவனித்தான் அஆஆ வாயை பிளந்தான். ஆன்டி ராகிங் சேரில் தலையை விரித்து ஆடினாள் அவனைப் பார்த்து காந்தா என்னைக் கொன்னுட்டாங்கடா காந்தா காந்தா....   காந்தா   என  அழைத்து படி ஏறினாள் .

  கருத்துகள் இல்லை