Header Ads

  • சற்று முன்

    நடிகை ஸ்ரீதேவி காலமானார்

    பிரபல நடிகை ஸ்ரீதேவி துபாயில் மாரடைப்பினால் மரணமடைந்துள்ளது திரையுலகினரையும் ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
    54 வயதாகும் ஸ்ரீதேவி துபாயில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற இடத்தில் உயிரிழந்துள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இவருக்கு போனி கபூர் என்ற கணவரும், ஜானவி மற்றும் குஷி என இரண்டு மகள்களும் உள்ளனர்.



    சிறுவயதில் முருகனாக நடித்தது முதல் இளம் வயதில் கதாநாயகியாக மயிலாக நடித்து தமிழ் திரை உலகில் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர். பாலிவுட் பட உலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வந்தவர் ஸ்ரீதேவி.
    சிவகாசி அருகேயுள்ள மீனம்பட்டி என்ற கிராமத்தில் ஐயப்பன் - ராஜேஸ்வரித் தம்பதியின் மகளாக 1963, ஆகஸ்ட் 13 அன்று பிறந்தவர் ஸ்ரீதேவி. கறுப்பு வெள்ளைக் காலத்தில், 4 வயதுச் சிறுமியாகத் தமிழ்க் கடவுள் முருகன் வேடத்தில் ஸ்ரீதேவி குழந்தை நட்சத்திரமாக துணைவன் படத்தில் 1969 ஆம் ஆண்டு அறிமுகமானார்.முருகன் வேடத்திற்கு பொருத்தமானவர் 
    சிறு வயதில் விருது பெற்றவர்.
    மூன்று முடிச்சு  மூன்றாம்பிறை



    இயக்குநர் சிகரம் கே. பாலசந்தர் தனது 'மூன்று முடிச்சு' படத்தில் ஸ்ரீதேவியை கதாநாயகியாக அறிமுப்படுத்தினார். 16 வயதினிலே மயிலாக பாரதிராஜாவால் உச்சம் பெற்றுத் தமிழ் ரசிகர்களின் கனவுகளை ஆக்கிரமித்துக்கொண்டது. , மூன்றாம் பிறை, மீண்டும் கோகிலா, பிரியா, சிவப்பு ரோஜாக்கள், வறுமையின் நிறம் சிவப்பு உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்டவர் ஸ்ரீதேவி.

    தலைமுறை தாண்டிய நடிகை  அப்பா, மகனுக்கு ஜோடி
    கமல், ரஜினியோடுதான் ஸ்ரீதேவி நடிப்பார் என்ற முத்திரைக்குள் சிக்கிவிடாமல், சிவகுமார், விஜயகுமார் என அனைத்து முக்கிய நடிகர்களுடனும் நடித்தார். தலைமுறைகளைக் கடந்து கதாநாயகியாகவே மிளிந்த சாதனை ஸ்ரீதேவிக்கு மட்டுமே உரியது. தெலுங்குப் படவுலகம் கொண்டாடிய நாகேஸ்வர ராவுக்கு ஜோடியான ஸ்ரீதேவி, அவருடைய மகன் நாகார்ஜுன் ஜோடியாகவும் நடித்தார். இந்திப் படவுலகிலோ தர்மேந்திராவுடன் ஜோடி சேர்ந்தவர் , அவருடைய மகன் சன்னி தியோலுக்கும் ஜோடியாகி அசத்தினார்.



     300 படங்களில் நடித்த ஸ்ரீதேவி 
    தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல மொழிகளில் 300க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் ஸ்ரீதேவி. அவர் கடைசியாக புலி தமிழ் படத்தில் நடித்தார். தனது கணவரின் தயாரிப்பில் மாம் என்ற திரைப்படத்தில் நடித்தார் ஸ்ரீதேவி. திரைப்படத்தில் நடித்துள்ள ஸ்ரீதேவி பல விருதுகளைப் பெற்றுள்ளார். ஜனாதிபதி கையினால் பத்மஸ்ரீ விருதும் பெற்றுள்ளார் ஸ்ரீதேவி.
    மாரடைப்பில்  ஸ்ரீதேவி மரணம்
    உடம்பின் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்வார் ஸ்ரீதேவி. இளமையோடு திகழ்ந்த ஸ்ரீதேவி மாரடைப்பில் மரணமடைந்துள்ளது திரையுலகினரை மட்டுமல்லாது திரைப்பட ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மயிலாக நடித்து சாந்தினியாக, நாகினியாக நடித்து ரசிகர்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்ட ஸ்ரீதேவி சிவகாசி மத்தாப்பு போல மின்னி மறைந்து விட்டார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad