முதலமைச்சர் கோரிக்கை, மௌனம் காத்த பிரதமர் மோடி
அரசு மானிய விலை ஸ்கூட்டர் திட்ட தொடக்க விழாவில், காவிரி மேலாண்மை வாரியம் பற்றி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரடியாக கோரிக்கை விடுத்தும், அதுகுறித்து பிரதமர் மோடி எதுவும் பேசவில்லை.
உழைக்கும் மகளிருக்கான மானிய விலை இருசக்கர வாகன திட்ட விழாவில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காவிரி மேலாண்மை வாரியத்தையும், காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவையும் உடனடியாக அமைக்க வேண்டும் என்று தமிழக மக்கள் சார்பில் கேட்டுக் கொள்வதாக குறிப்பிட்டார். பிரதமருக்கு புரியும் வண்ணம், இந்த கோரிக்கையை ஆங்கிலத்திலும் அவர் எடுத்துரைத்தார். பின்னர் பேசிய பிரதமர் மோடி, பா.ஜ.க. அரசின் பல்வேறு சாதனைகளையும் பட்டியலிட்டார். ஆனால் அவரது பேச்சில் காவிரி விவகாரம் தொடர்பான கருத்துகள் இடம்பெறவில்லை.
கருத்துகள் இல்லை