• சற்று முன்

    முப்பெரும் விழாவில் பழனிசாமிக்கு கட்டவுட் பன்னிர் செல்வத்துக்கு கெட்டவுட்


    மதுரை : மதுரையில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் முதல்வர் பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் பங்கேற்ற நிலையில், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பங்கேற்காதது இரு அணிகளிடையே மீண்டும் பிளவை ஏற்படுத்தியுள்ளதா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இரட்டை இலை சின்னம் கிடைத்த வெற்றியை கொண்டாடும் விதமாகவும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா, ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா என முப்பெரும் விழாவிற்கு மதுரையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட தோப்பூரில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்காக மதுரை விமான நிலையம் வந்த முதல்வர் பழனிசாமிக்கு இரட்டை இலை பெற்ற வெற்றியை குறிக்கும் விதமாக வெற்றிலை மாலை போடப்பட்டது. இதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் முதல்வர் பழனிசாமி கொடியேற்றி வைத்தார். இந்த கொடிக்கம்பத்தில் அமைச்சர்கள் மற்றும் மதுரை மாவட்ட எம்எல்ஏக்களின் பெயர்களும் இடம்பெற்றிருந்தன. கல்வெட்டின் பக்கவாட்டில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் பெயர் இடம்பெற்றிருந்தது, இதுவும் அவசர அவசரமாக இரவோடு இரவாக சேர்க்கப்பட்டுள்ளதாக ஓ.பிஎஸ் ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.

    எம்எல்ஏக்களுக்கும் அழைப்பு இல்லை 


    இன்றே நடத்த வேண்டிய கட்டாயம் என்ன, அது மட்டுமின்றி ஓ.பிஎஸ் அணியைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகளுக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை என்று சொல்லப்படுகிறது. மேலும் ஓ.பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் சரவணன் மற்றும் மாணிக்கம் உள்ளிட்டோருக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.பன்னிர் ஆதரவாளர்கள் கொந்தளிபில் உள்ளனர்,


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad