• சற்று முன்

    ஆ.கே .நகர் இடை தேர்தலில் புதிய விதிகளை அமுல்படிதியுள்ளது

    சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் மாலை 5 மணி முதல் காலை 9 மணி வரை வீடு வீடாக சென்று பிரச்சரம் செய்ய தடை விதித்துள்ள தேர்தல் ஆணையம், சென்னையில் உள்ள கடைகளில் டோக்கன் மூலம் பொருட்களை விற்பனை செய்யவும் தடை விதித்துள்ளது.சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு வரும் டிசம்பர் 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளதை அடுத்து, அரசியல் கட்சியினருக்கு தேர்தல் ஆணையம் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

    அதன்படி, ஆர்.கே.நகர் தொகுதியில் இரவு நேரங்களில் பணப்பட்டுவாடா செய்யப்படுவதைத் தடுக்க மாலை 5 மணி முதல் காலை 9 மணி வரை வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்க தடை விதித்துள்ள தேர்தல் ஆணையம், இரவு நேரங்களில் வீதிக்கு ஒரு துணை ராணுவப்படையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள் என்றும் தெரிவித்துள்ளது.
    தேர்தல் பிரச்சார வாகனங்களுக்கு தேர்தல் அதிகாரியிடம் முன் அனுமதி பெற வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ள தேர்தல் ஆணையம், வெளியூர் வாகனங்கள் தொகுதிக்குள் நிறுத்தப்பட்டாலோ, காரணமின்றி நுழைந்தாலோ அவை பறிமுதல் செய்யப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. அரசியல் கட்சியினரின் முன் அனுமதி பெறாத வாகனங்கள் ஆணையத்தால் பறிமுதல் செய்யப்பட்டால், அதற்கான செலவுகள் வேட்பாளரின் கணக்கில் சேர்க்கப்படும் என்றும், அரசியல் கட்சியினர் வீதிகளில் தற்காலிக பூத் அமைத்து, அங்கு அமர்வதற்கும் தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. மேலும், கடைகளில் டோக்கன் வைத்து பொருட்களை விற்பனை செய்தால் கடை உரிமையாளர் கைது செய்யப்படுவார் என்று எச்சரிக்கை விடுத்துள்ள தேர்தல் ஆணையம், இந்த தடை சென்னை முழுவதும் அமலுக்கு வருவதாகவும் தெரிவித்துள்ளது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad