• சற்று முன்

    உயர் அழுத்த மின்சார கம்பியில் இரும்பு ராடு உராய்ந்ததில், வெல்டிங் பணியாளர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்


    காஞ்சிபுரம் அருகே புதிய வீடு கட்டுமான பணியின் போது உயர் அழுத்த மின்சார கம்பியில் இரும்பு ராடு உராய்ந்ததில், வெல்டிங் பணியாளர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்த பரிதாபம். காஞ்சிபுரம் புதிய ரயில் நிலையம் அருகே வேகமாக வளர்ந்து வரும் புறநகர் பகுதியான இந்திரா நகர், ஜி.எஸ்.ஆர் அவென்யூவில் புதிய வீடு ஒன்றின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்தன.​


    தற்போது வீட்டின் இரண்டாவது மாடி கட்டுமானப் பணி நிறைவடையும் தருவாயில் உள்ளது. இதற்காக, மாடி தடுப்புகள் அமைக்கும் பணிக்கு தேவையான SS எனப்படும் இரும்பு கம்பிகளை கீழிருந்து மேலே ஏற்றும் பணியில் ஆட்கள் ஈடுபட்டிருந்தனர். திருவண்ணாமலை மாவட்டம் உக்கல் பகுதியை சேர்ந்த வெல்டிங் தொழிலாளி கன்னியப்பன், வீட்டின் உரிமையாளர் மற்றும் அவரது மகன் ஆகிய மூவரும் இந்த வேலையைச் செய்து வந்தனர்.​

    பணியின் போது, இரும்பு கம்பிகளை கீழிருந்து மேல் நோக்கி உயர்த்த முயன்றபோது, எதிர்பாராதவிதமாக அருகில் சென்றுகொண்டிருந்த உயர் அழுத்த மின்சார கம்பியின் மீது இரும்பு ராடு உராய்ந்தது. இதில் மின்சாரம் பாய்ந்து, கன்னியப்பன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். ​மின்சாரம் தாக்கிய அதிர்வில் அருகில் இருந்த மின்மாற்றி (Transformer) பழுதடைந்து பயங்கர சத்தத்துடன் வெடித்தது. சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், கன்னியப்பன் உயிரிழந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

     ​தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொன்னேரிகரை காவல் துறையினர், கன்னியப்பனின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.  மேலும், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad