அரசு வேலைவாய்ப்பு முகாம் வெறும் கண் துடைப்பு படிப்பிற்கு ஏற்ற வேலை இல்லை மன உளைச்சலில் பட்டதாரி இளைஞர்கள்
காஞ்சிபுரத்தில் சமீபத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற்ற அரசு வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது.சுற்று வட்டார கிராமத்தைச் சேர்ந்த அனைவரும் வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொண்டனர். இதில் கலந்துகொண்ட பலருக்கு ஸ்ரீபெரும்புதூரில் உள்ள கார் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழில் நிறுவனங்களில் வேலை கிடைத்தது. திங்கட்கிழமை காலை வேலைக்கு வர வேண்டும் என்று கடிதமும் கொடுத்துள்ளனர். இவர்கள் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வேலைக்குச் சென்றுள்ளனர். ஸ்ரீபெரும்புதூரில் இயங்கி வரும் கார் உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் மிகுந்த ஆவலுடனும் எதிர்பார்ப்புடன் வேலைக்குச் சென்றுள்ளனர். இவர் BCA பட்டதாரி படித்துள்ளார் பணிக்குச் சென்றவுடன் அங்கு அதிகாரிகள் இவர்களுடைய சான்றிதழ்கள் கல்விச் சான்றிதழ்கள் அனைத்தையும் சரி பார்த்துவிட்டு இவர்களுக்கு சீருடை வழங்கியுள்ளனர் காலை சிற்றுண்டி கொடுத்துள்ளனர் பிறகு சீருடை வழங்கியுள்ளனர் அதன் பின்னர் இவர்கள் அனைவரும் எதிர்பார்த்தது கணினியில் கம்ப்யூட்டரில் வேலை என்று எதிர்பார்த்தனர்.
இவர்களின் எதிர்பார்ப்பு ஏமாற்றத்தில் முடிந்தது உதிரி பாகங்களை ட்ராலி மூலம் ஏற்றி வரவும் உற்பத்தி செய்யும் இடங்களுக்கு உதறி பாகங்களை கொண்டு சேர்ப்பதும் பிறகு அங்கிருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு செல்வதும் போன்ற கூலி வேலை செய்யும் பணியை வழங்கியுள்ளனர்.
மதிய உணவும் வழங்கப்பட்டது மாலை 6:30 மணி அளவில் அவர்களைப் பேருந்து ஏற்றி காஞ்சிபுரத்திற்கு கொண்டு வந்து விடாமல் பொன்னேரிக்கரை அங்கே இறக்கி விட்டு உள்ளனர். பிறகு அங்கிருந்து காஞ்சிபுரத்திற்கு தனியாக ஒரு பேருந்தில் வந்து காஞ்சிபுரத்திலிருந்து அவர்களுடைய கிராமத்திற்கு செல்லுகின்ற சூழல் ஏற்படுகிறது. அப்பொழுது இவர்கள் வீட்டுக்கு செல்லும்போது மணி ஏழு மணி ஆகிவிடுகிறது. சொல்வது ஒன்று செய்வது ஒன்று படிப்பிற்கு ஏற்ற வேலை இல்லை என்று மன உளைச்சல் அரசு முகாமில் அரசு வேலை வாய்ப்பு முகாமில் படிப்பிற்கு ஏற்ற வேலையை அரசு வழங்கினால் மகிழ்ச்சியாக இருக்கும் என்று பெற்றோர்கள், வேலை தேடும் இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர். இனிவரும் காலகட்டத்தில் குறைவான சம்பளமாக இருந்தாலும் படிப்பிற்கு ஏற்ற வேலையை வழங்க வேண்டும் என பெற்றோர்கள், வேலை தேடும் இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள் கேட்டுக் கொள்கின்றனர்






கருத்துகள் இல்லை