காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதியில் தரமற்ற முறையில் பாதாள சாக்கடை பணியின் நடைபெறுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு
காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதியில் தரமற்ற முறையில் பாதாள சாக்கடை பணியின் நடைபெறுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு
பாதாள சாக்கடை தோண்டும் பள்ளங்கள் முறையாக மூடாததால் அவ்வழியாக சென்ற பசு மாடு விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பொழுது ஜேசிபி இயந்திரம் மூலம் மீட்டெடுத்த பொதுமக்கள் விபத்து நடந்த பிறகு பள்ளத்தை சுற்றி தடுப்புகள் அமைத்த மாநகராட்சி
காஞ்சிபுரம் மாநகராட்சியில் 51 வார்டுகள் உள்ளன. இவற்றில் 40 வார்டுகளுக்கு பாதாள சாக்கடை இணைப்புகள் கடந்த 1978-ம் ஆண்டு கொடுக்கப்பட்டன. மீதமுள்ள 11 வார்டுகள்
ஊராட்சிகளாக இருந்து காஞ்சிபுரம் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டவை. அதனால் அந்தப் பகுதிகளில் பாதாள சாக்கடை இணைப்பு இல்லாமல் இருந்தது. அந்த பகுதிகளில் புதிதாக பாதாள சாக்கடை இணைப்பு கொடுக்க ரூ.254 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் உலக வங்கி நிதியுதவியுடன் செயல்படுத்தப்படுகிறது.
இந்த திட்டத்தின் மூலம் 180.243 கி.மீ தூரத்துக்கு பாதாள சாக்கடைக்கான குழாய்கள் அமைக்கப்பட உள்ளன. பிரதான குழாய்கள் மட்டும் 14.101 கி.மீ தூரத்துக்கு செல்கிறது. அடைப்பு ஏற்பட்டால் ஆங்காங்கே சுத்தம் செய்வதற்கு வசதியாக 9 மீட்டர் தூரத்துக்கு ஒன்று என மேல்நோக்கிய ஆளிறங்கும் அளவிலான குழாய்கள் மொத்தம் 7,437 அமைக்கப்பட உள்ளன. மொத்தம் 15,652 வீடுகளுக்கு பாதாள சாக்கடை இணைப்புகள் வழங்கப்பட உள்ளன. இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 48வது வார்டு வர்த்தமான் நகர் பகுதியில் அவ்வழியாக போடப்பட்ட பாதாள சாக்கடை பள்ளம் முறையாக மூடப்படாததால் அமைதியாக சென்ற பசு மாடு ஒன்று பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதனுடைய பள்ளத்தில் சிக்கிய பசுமாட்டை நீண்ட நேரம் போராடியும் அகற்ற முடியாததால் இன்று காலை ஜேசிபி இயந்திரத்தை வரவைத்து காரை மீட்டெடுத்த அப்பகுதி மக்கள். அவ்வப்பொழுது பாதாள சாக்கடை தோண்டும் பள்ளங்கள் முறையாக மூடப்படாததால் வாகனங்கள் சிக்கி விபத்தடைவது மட்டுமல்லாமல் வாகனங்கள் சேதமடைந்து பயனற்று போவது தொடர்கதை ஆகிவிட்டது,
பள்ளம் தோண்டிய பிறகு பொதுமக்கள் அவ்வழியாக செல்லாமல் இருக்க தடுப்பு வழி அமைக்க தவறியதால் அவ்வப்போது விபத்து உள்ளாகிறது விபத்து நடந்த பிறகு மாநகராட்சி சார்பில் பகுதியில் தடுப்பு வேலி அமைக்கப்பட்டது






கருத்துகள் இல்லை