• சற்று முன்

    மல்லிகா அர்ஜுனா கார்கே அவர்களுக்கு நேர்ந்த தீண்டாமை கொடுமையை கண்டித்து காந்திய வழியில் சத்யாகிரக கண்டன ஆர்ப்பாட்டம்


    காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்ட தலைவர் அருள்ராஜ் தலைமையில் மாநகராட்சி துணை மேயர் குமரகுருநாதன், மாநகர செயலாளர் நாதன் மற்றும் முன்னாள் மாவட்ட தலைவர் மூத்த வழக்கறிஞர் ஜிவி மதியழகன் ஆகியோர் முன்னிலையில் சிறப்பு விருந்தினராக காங்கிரஸ் முன்னாள்  தமிழ்நாடு மாநிலத் தலைவர் செல்வபெருந்தகை கலந்து கொண்டு காஞ்சிபுரம் வட்டாச்சியர் அலுவலகம் எதிரே மல்லிகா அர்ஜுனா கார்கே அவர்களுக்கு நேர்ந்த தீண்டாமை கொடுமையை கண்டித்து காந்திய வழியில் சத்யாகிரக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் கருப்பு பேட்ஜ் அணிந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர், 


    இந்த ஆர்ப்பாட்டத்தில் தீண்டாமையை உருவாக்கும் பாஜகவுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதன் பின் செய்தியாளர்களை சந்தித்த செல்வபெருந்தகை பேசுகையில்,

    தமிழகத்தில் படுகொலைகளை தடுத்து நிறுத்த வேண்டும், தொடர்வதை தடுக்க காவல்துறையினர் இரும்புக்கரம் கொண்டு அடைக்கவேண்டும், படுகொலைகள் தொடர் நடவடிக்கையாக இருக்கிறது, சட்டத்தின் மீதும் ஆட்சியின் மீதும் நம்பிக்கை இல்லாத சில சமூக விரோதிகள் இதுபோன்று செய்து வருகின்றார் இதை எந்தவிதத்திலும் அனுமதிக்கக்கூடாது, நடவடிக்கை எடுக்கவேண்டும் தமிழக அரசும் வேடிக்கை பார்க்கக்கூடாது தடுத்து நிறுத்தவேண்டும் என காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை காஞ்சிபுரத்தில் பேட்டி அளித்தார்

    இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் பொறுப்பாளர்கள் பத்மநாபன், குப்புசாமி, சீனிவாச ராகவன், ஐயப்பன், நிக்கோலஸ், அன்பு, வாலாஜாபாத் சுகுமார் , யோகி , ராஜசேகர் மற்றும் மாநகர பகுதி செயலாளர் காமராஜ்,  சப்தகிரி, பார்த்தசாரதி, கௌதம் உள்ளிட்ட திரளான காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

     செய்தியாளர் விஜய் ராஜா

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad