ஆம்பூர் அருகே நரியம்பட்டு ஊராட்சியில் சுதந்திர தின சிறப்பு கிராம சபை கூட்டம்
கூட்டத்திற்கு நரியம்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் வி. பாரதி ஸ்ரீ தலைமை வகித்தார். கூட்டத்தில் ஊராட்சியின் வளர்ச்சிப் பணிகள் மற்றும் பொதுமக்களின் அடிப்படை தேவைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது
ஆம்பூர் திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த நரியம்பட்டு ஊராட்சியில் 80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு நரியம்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் வி. பாரதி ஸ்ரீ தலைமை வகித்தார். கூட்டத்தில் ஊராட்சியின் வளர்ச்சிப் பணிகள் மற்றும் பொதுமக்களின் அடிப்படை தேவைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
குறிப்பாக, சாலை வசதி, குடிநீர் வசதி, தெருவிளக்கு வசதி, புதிய அரசு தொகுப்பு வீடுகள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் தொடர்பாக விவாதிக்கப்பட்டு, அதற்கான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலும், கிராம சபை கூட்டத்தில் எச்ஐவி/எய்ட்ஸ் தடுப்பு மற்றும் பாதுகாப்பு குறித்து உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது. இதில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் அஸ்ரர் அஹமத், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் சரிதா தமிழரசன், கோமதி அப்பாவு, ஜரினா பேகம் அன்சர் பாஷா, பர்வேஸ் அஹமத், பர்வீன் பானு அன்வர் பாஷா, அஸ்லம் பாஷா, பிரியா செல்வராஜ், நியமன உறுப்பினர் அப்பாஸ், ஊராட்சி செயலாளர் கோமதி, கிராம நிர்வாக அலுவலர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.






கருத்துகள் இல்லை