தேர்தல் வாக்குறுதி அளித்து ஏமாற்றும் தமிழக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்
ஆம்பூர் அடுத்த கரும்பூரில் தமிழக விவசாய சங்கம் சார்பில் பயிர் கடன்களை தள்ளுபடி செய்வதாக தேர்தல் வாக்குறுதி அளித்து ஏமாற்றும் தமிழக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த கரும்பூரில் தமிழக விவசாய சங்கம் சார்பில் கரும்பூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் விவசாயிகளின் பயிர் கடன்களை தள்ளுபடி செய்வதாக தேர்தல் வாக்குறுதி அளித்து வாக்குகளை பெற்று வெற்றி பெற்றவுடன் விவசாயிகளை ஏமாற்றும் தமிழக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
இந்த கண்டன
ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர்.ஆனந்தன் தலைமை தாங்கினார். ஊர்வலத்தை மாநில பொதுச் செயலாளர்.உதயகுமார் துவக்கி வைத்தார். கரும்பூர் கிளைச் செயலாளர். ஜானகிராமன் வரவேற்புரை நிகழ்த்தினார். விவசாயிகள் கையில் கொடிகளை ஏந்தி பேரணியாக சென்று கரும்பூர் குமாரமங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் அலுவலகம் முன்பு கண்டன கோஷம் வருகின்ற விவசாயிகள் நிதி நிலை அறிக்கை அனைத்து விவசாயிகளின் கடன் நிலை தள்ளுபடி செய்யவில்லை என்றால் சட்டமன்றத்தை விவசாயிகள் முற்றுகை ஏற்படும் நிலை உருவாகும் என்று மாநில பொதுச் செயலாளர். உதயகுமார் கூறினார்
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கரும்பூர் ஒன்றிய குழு உறுப்பினர். ராஜேந்திரன் மிட்டாளம் ஒன்றிய குழு உறுப்பினர். மகாதேவன் கரும்பூர் ஊராட்சி மன்ற தலைவர். ஏ.கே.முகேஷ் மாதனூர் ஒன்றிய செயற்குழு உறுப்பினர் ஏ.இ.குணா, ஒப்பந்ததாரர் தேவேந்திரன் கரும்பூர் பூபதி மற்றும் ஆம்பூர், வாணியம்பாடி சுற்றுப்புற கிராம பகுதிகளில் இருந்து விவசாயிகள் கலந்து கொண்டனர்.






கருத்துகள் இல்லை