• சற்று முன்

    போக்குவரத்து மேம்பாட்டு ஆய்வில் ஸ்ரீ சங்கரா கல்லூரி மாணவர்கள் பங்கேற்பு


    சென்னை ஒருங்கிணைந்த பெருநகரப் போக்குவரத்து ஆணையம் (CUMTA) வாகன மேற்கொண்டு வரும் "காஞ்சிபுரம் போக்குவரத்து மேம்பாட்டு ஆய்வு -நிறுத்தத் தேவைக் கணக்கெடுப்பு" பணியில், ஸ்ரீ சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரி கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டத் தன்னார்வலர்கள் மற்றும் தேசிய மாணவர் படை (NCC) மாணவர்கள் கணக்கெடுப்பாளர்களாக பங்கேற்று சிறப்பாக பணியாற்றி வருகின்றனர்.


    இந்நிகழ்விற்காக கல்லூரி முதல்வர் முனைவர் கலை ராம. வெங்கடேசன் அவர்களின் வழிகாட்டுதலின்படி, 100 நாட்டு நலப்பணித் திட்டத் தன்னார்வலர்கள் மற்றும் தேசிய மாணவர் படை மாணவர்கள் கணக்கெடுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் மற்றும் தேசிய மாணவர் படை அலுவலர் ஆகியோர் மேற்பார்வையாளர்களாக செயல்பட்டு, கணக்கெடுப்புப் பணிகளை ஒருங்கிணைத்து வருகின்றனர்.


    காஞ்சிபுரம் நகரின் முக்கிய சாலைகளில் வாகன நிறுத்தத் தேவையை அறிவியல் முறையில் கணக்கிட்டு, எதிர்கால போக்குவரத்து திட்டமிடலுக்குத் தேவையான தரவுகளை சேகரிப்பதே இந்த ஆய்வின் நோக்கமாகும். இதற்காக மாணவர்களுக்கு ஒரு நாள் பயிற்சி வழங்கப்பட்டு, தொடர்ந்து இரண்டு நாட்கள் (ஒரு வாரநாள் மற்றும் ஒரு வார இறுதி நாள்) தலா இரண்டு பணிமுறைகளில் களப்பணி மேற்கொள்ளப்படுகிறது.


    இதுகுறித்து கல்லூரி முதல்வர் முனைவர் கலை. ராம. வெங்கடேசன் அவர்கள் கூறுகையில், "நாட்டு நலப்பணித் திட்டத் தன்னார்வலர்களும் தேசிய மாணவர் படை மாணவர்களும் சமூகப் பொறுப்புணர்வுடன் இந்தக் கணக்கெடுப்புப் பணியில் ஈடுபட்டு வருவது பெருமைக்குரியது. இதுபோன்ற அரசு சார்ந்த ஆய்வுப் பணிகள் மாணவர்களின் தலைமைத்துவம், ஒழுக்கம் மற்றும் சமூகப் பங்களிப்பை மேம்படுத்தும் சிறந்த வாய்ப்பாக அமைகின்றன" என்றார்.


    அரசுத்துறைகளுடன் இணைந்து சமூக நலன் சார்ந்த திட்டங்களில் தொடர்ந்து பங்களித்து, மாணவர்களின் சமூகப் பொறுப்புணர்வை வளர்க்கும் பணிகளை ஸ்ரீ சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad