• சற்று முன்

    80-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.தி.சினேகா, இ.ஆ.ப., அவர்கள் தேசிய கொடியை ஏற்றி வைத்து, மரியாதை செலுத்தினார்கள்.

    காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள அண்ணா காவல் அரங்கில் நடைபெற்ற  80-வது சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.தி.சினேகா, இ.ஆ.ப., அவர்கள் தேசிய கொடியை ஏற்றி வைத்து, மரியாதை செலுத்தினார்கள்.

    பல்வேறு அரசு துறைகளின் சார்பில் 93 பயனாளிகளுக்கு ரூ.1.56 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.

    பல்வேறு துறைகளின் சிறப்பாக பணியாற்றிய 206  அரசு அலுவலர்கள், மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களுக்கும், 15 காவலர்களுக்கும் பாராட்டுச் சான்றிதழ்.

    காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள அண்ணா காவல் அரங்கில் இன்று (15.08.2026) நடைபெற்ற சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.தி.சினேகா, இ.ஆ.ப., அவர்கள் தேசிய கொடியை ஏற்றி வைத்து, மரியாதை செலுத்தி, காவல்துறை மற்றும் ஊர்க்காவல் படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டு, சுதந்திரப் போராட்ட தியாகிகள் மற்றும் மொழிப்போர் தியாகிகளுக்கு பொன்னாடை அணிவித்து கௌரவித்தார்கள்.


    இதனை தொடர்ந்து முன்னாள் படை வீரர்கள் நலத் துறை சார்பில், 3 பயனாளிகளுக்கு ரூ.7,939/-  மதிப்பீட்டில் வீட்டு வரிச் சலுகை மீளப்பெறுதல் உதவிகளும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 3 பயனாளிகளுக்கு  ரூ.25,800/- மதிப்பீட்டில் காதொலிக் கருவிகளும்,  வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் 18 பயனாளிகளுக்கு ரூ. 9,67,648/- மதிப்பீட்டில் வீட்டுமனைப் பட்டா (ம) முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டத்தின்கீழ் நலத்திட்ட உதவிகளும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 10 பயனாளிகளுக்கு ரூ. 52,070/- மதிப்பீட்டில் மின்மோட்டாருடன் கூடிய தையல் இயந்திரங்களும்,  சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் 5 பயனாளிகளுக்கு ரூ.2.50,000/- மதிப்பீட்டில் முதலமைச்சரின் இரண்டு பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின்கீழ் வைப்புத்தொகையும்,  தாட்கோ துறை சார்பில் 33 பயனாளிகளுக்கு ரூ.40,77,374/- மதிப்பீட்டில் பால் பண்ணைத் தொழில் தொடங்க கடனுதவிகளும், வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் 6 பயனாளிகளுக்கு ரூ.46,000/- மதிப்பீட்டில்  பயிர் விளைச்சல் போட்டி – பரிசுத் தொகையும்,  தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறையின் சார்பில் 1 பயனாளிகளுக்கு ரூ.1,52,699/- மதிப்பீட்டில் நுண்ணீர் பாசனம் அமைத்தல் பணிக்கான நலத்திட்ட உதவிகளும், தமிழ்நாடு மாநில ஊரக நகர்புர வாழ்வாதார இயக்கம், மகளிர் திட்டம் சார்பில் 9 பயனாளிகளுக்கு, ரூ.90,20,000/- சமுதாய முதலீட்டு நிதிகளும், தொழிலாளர் உதவி ஆணையர் ஆலுவலகம் (சமூக பாதுகாப்பு திட்டம்) 5 பயனாளிகளுக்கு ரூ.5,92,400/- மதிப்பிலான விபத்து மரணம் மாதாந்தி ஓய்வூதிய நிதி உதவிகளும் என மொத்தம் 93 பயனாளிகளுக்கு ரூ.1,51,91,930/-  மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.தி.சினேகா, இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்கள். 


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad