காஞ்சிபுரம் முத்தியால்பேட்டை ஸ்ரீமூலஸ்தம்மன் 26ஆம் ஆண்டு ஆடித்திருவிழா அமைச்சர்கள் பங்கேற்பு
முத்தியால்பேட்டை ஸ்ரீமூலஸ்தம்மன் 26ஆம் ஆண்டு ஆடித்திருவிழா கூழ்வார்த்தலை தொடர்ந்து வெகு விமரிசையாக நடைபெற்ற மூலஸ்தம்மன் திருவதி உலா
பிரம்மாண்ட அலங்காரத்தில் வானவேடிக்கைகள் முழங்க திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்த மூலஸ்தம்மனை வழிநெடுகிலும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் அமைச்சர்கள் தென்னரசு,ரஞ்சித்குமார் மற்றும் எம்.எல்.ஏ முனிரத்தினம் ஆகியோரும் சாமி தரிசனம்
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியம் முத்தியால்பேட்டை கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ மூலஸ்தம்மன் ஆலயம் உள்ளது.
இந்த ஆலயத்தின் 26 ஆம் ஆண்டு ஆடித்திருவிழா முத்தியால்பேட்டை ஆர்.வாழ்முனி நாயக்கர் நல்லாசியுடன் தொடங்கி விமர்சையாக நடைபெற்று வரும் நிலையில்,நேற்று ஞாயிற்றுக்கிழமை மதியம் கூழ்வார்தல் திருவிழா நடைபெற்றது.வனத்துறை அமைச்சரான ஆர்.வி.ரஞ்சித்குமார் பொதுமக்களுக்கு கூழ் வார்த்தல் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
அதனை தொடர்ந்து இரவு மூலஸ்தம்மன் பிரம்மாண்ட அலங்காரத்தில் வானவேடிக்கைகள் முழங்க திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.வழி நெடுகிலும் ஏராளமான பக்தர்கள் காத்திருந்து திரு வீதி உலா வந்த மூலஸ்தம்மனை வேண்டி விரும்பி சாமி தரிசனம் செய்து வழிபட்டு சென்றனர்.
இந்நிகழ்வில் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் எஸ்.பி.கே.தென்னரசு,வனத்துறை அமைச்சர் ஆர்.வி.ரஞ்சித்குமார், உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் ஜா.முனிரத்தினம் , வழக்கறிஞர் ஆர்.வி.உதயன் மற்றும் கிராம பொதுமக்கள் என ஏராளமானோர் பங்கேற்று மூலஸ்தம்மனை சாமி தரிசனம் செய்து வழிபட்டு சென்றனர்.






கருத்துகள் இல்லை