• சற்று முன்

    கல்லூரி மாணவர் மற்றும் மாணவியர் விடுதியில் திடீர் ஆய்வு செய்த அமைச்சர்



    பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் திரு.வி.சம்பத்குமார் அவர்கள் சமூக நீதி. கல்லூரி மாணவர் மற்றும் மாணவியர் விடுதியில் திடீர் ஆய்வு செய்தார்.

    காஞ்சிபுரம் மாவட்டம்,  காஞ்சிபுரம் ஒன்றியம், தேனம்பாக்கம், பெரியார் நகர் பகுதியில் அமைந்துள்ள சமூக நீதி கல்லூரி மாணவர் விடுதியில் மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் திரு.வி.சம்பத்குமார் அவர்கள் இன்று (08.08.2026) திடீர் ஆய்வு செய்தார்கள். 



    சமூக நீதி கல்லூரி மாணவர் விடுதி வளாகம் மற்றும் விடுதி முழுமையும் பார்வையிட்டு, வளாகத்தில் கழிவுநீர் வெளியேறுவதை சீர் செய்ய கேட்டுக் கொண்டார் வளாகத்தில் உள்ள கிணறு  மூடப்படாமல் இருப்பதால் அசம்பாவிதம் ஏற்படலாம் என்பதை தெரிவித்து, கிணற்றின் மேல்வலை போட்டு மூட விடுதி காப்பாளருக்கு உத்தரவிட்டார் தொடர்ந்து தண்ணீர் குழாய் முறையாக இல்லாததை பார்த்து அவற்றை மாற்றும்படி கேட்டுக் கொண்டார். மேலும் விடுதியில் 25 மாணாக்கர்கள் தங்கி பயின்று வருகின்றனர். அவர்களுக்கான வருகை பதிவேடு, தங்கும் அறைகள், கழிப்பறை, சமையல் கூடம் ஆகியவைகளை ஆய்வு செய்தார். விடுதி மாணவர்களிடம் பிரச்சனைகள் குறித்து மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் திரு.வி.சம்பத்குமார் அவர்கள் கேட்டறிந்தார். 


    இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம் மாநகராட்சி, வேளிங்கப்பட்டறை, ஓரிக்கை சமூகநீதி கல்லூரி மாணவியர் விடுதியில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார். விடுதியில் 34 மாணவிகள் தங்கி கல்லூரிகளில் பயின்று வருகின்றனர் என தெரிவித்தனர். விடுதி வளாகம் மற்றும் விடுதி முழுமையும் தூய்மையாக சிறப்பாக பராமரிக்கப்பட்டுள்ளது என பாராட்டு தெரிவித்தார். தொடர்ந்து விடுதியில் சமையல் கூடம், கழிப்பறை இவைகளை பார்வையிட்டு, சமையல் கூடத்தில் மாணவிகளுக்கு தயார் செய்யப்பட்டு வரும் உணவை சுவைத்து பார்த்து தரமாக உள்ளது என பாராட்டு தெரிவித்தார். மாணவிகளிடம் ஏதேனும் பிரச்சினை உள்ளதா என கேட்டறிந்தார். எங்களுக்கு நிரந்தர சமையலர் பணியை நிரப்பி கொடுக்க வேண்டும் என மாணவிகள் மாண்புமிகு அமைச்சர் ஆவர்களிடம் தெரிவித்தனர். மாணவியர்களின் கோரிக்கை உடனடியாக தீர்வு காணப்படும் என மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் திரு.வி.சம்பத்குமார் அவர்கள்  மாணவிகளிடம் தெரிவித்தார். மற்றபடி எந்த குறையும் இல்லை என மாணவியர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து  நன்றாக படித்து முன்னேற வேண்டும் இதுவே மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆசை ஆகவே நீங்கள் உங்களுடைய படிப்பில் கவனம் செலுத்துங்கள் உங்களுக்கான பிரச்சனைகள் இருந்தால் ஒவ்வொன்றாக தனி கவனம் செலுத்தி தீர்வு காணப்படும் என மாணவ, மாணவிகளிடம் மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் திரு.வி.சம்பத்குமார் அவர்கள்  தெரிவித்தார். தொடர்ந்து விடுதி காப்பாளர் இடம் தேவைப்படும் உதவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் வாயிலாக தெரிவிக்க வேண்டும் எனவும்  மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் திரு.வி.சம்பத்குமார் அவர்கள் கேட்டுக்கொண்டார்.

    இவ் ஆய்வின் போது  மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.தி.சினேகா, இ.ஆ.ப., உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஜே.முனிரத்தினம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் திரு.சங்கர் மற்றும் விடுதிக்காப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad