• சற்று முன்


    ஆம்பூர் லயன்ஸ் சங்கம் மற்றும் Mazharul Uloom College (Autonomous), Ambur இணைந்து, ஆம்பூர் அரசு மருத்துவமனையின் ஒத்துழைப்புடன் மாபெரும் ரத்த தான முகாம் சிறப்பாக நடைபெற்றது.


    இந்நிகழ்வில் கல்லூரி முதல்வர் டாக்டர் கே.ஹெச். கலிமுல்லா அவர்கள் தலைமையேற்றார். ஆம்பூர் லயன்ஸ் சங்கத் தலைவர் லயன். எம். முனீர் அகமது, செயலாளர் லயன். நேதாஜி, பொருளாளர் லயன். சலீம் அகமது ஆகியோர் முன்னிலை வகித்தனர். ரத்த தானம் ஏன் செய்ய வேண்டும், ரத்த தானம் செய்வதால் ஏற்படும் நன்மைகள் என்ன, ஒரு நபர் வழங்கும் ரத்தம் எவ்வாறு பல உயிர்களைக் காப்பாற்ற உதவுகிறது என்பது குறித்து ஆம்பூர் அரசு மருத்துவமனை மருத்துவர் டாக்டர் யோகேஸ்வரன், M.S. (Ortho.) அவர்கள் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் எடுத்துரைத்தார்.



    மேலும், லயன்ஸ் சங்க இயக்குநரும் மாவட்டத் தலைவருமான லயன். பிரதோஷ் கே. அகமது அவர்கள் மாணவர்களுக்கு நல்வழிகாட்டும் கருத்துகளை வழங்கினார். இதனைத் தொடர்ந்து, Dress Waves Fashion சார்பாக ஓம் சக்தி லயன். ஜி. பாபு மாவட்டத் தலைவர்.அவர்கள் ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு 20 தரமான போர்வைகள் வழங்கினார். மேலும், மாணவர்களின் சமூக சேவையின் முக்கியத்துவம் குறித்தும் எடுத்துரைத்தார்.

    இந்த முகாமில் ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு 50 யூனிட் ரத்தம் தானமாக வழங்கப்பட்டது. மேலும், கல்லூரி மாணவிகள் 60-க்கும் மேற்பட்டோருக்கு ரத்தப் பரிசோதனை செய்யப்பட்டு, அவர்களின் ரத்த வகை (Blood Group) குறித்து தெரிவிக்கப்பட்டது. நிகழ்ச்சியின் நிறைவாக கலந்து கொண்ட அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டதுடன், நினைவுப் பரிசுகளும் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் கல்லூரியின் துணை முதல்வர், NSS ஆசிரியர்கள், பேராசிரியர்கள் மற்றும் லயன்ஸ் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். குறிப்பாக, மாவட்டத் தலைவர் லயன். யு. தமீம் அகமது, லயன். என். தேவராஜன், வட்டாரத் தலைவர் லயன். ஸ்ரீதரன், லயன். கணேஷ்பாண்டியன், மாவட்டத் தலைவர் கருணாநிதி, ரஹ்மானியா பிரியாணி உரிமையாளர் திரு. எம். ரைஸ் அஹ்மத், ஆம்பூர் அரசு மருத்துவமனை ரத்ததானப் பிரிவு பொறுப்பாளர் திரு. சிலம்பரசன் மற்றும் அவரது குழுவினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    இறுதியில், லயன்ஸ் சங்கத்தின் சார்பாக மாவட்டத் தலைவர் லயன். ஹரிஹரன் அவர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.


    “ரத்த தானம் செய்வோம் – உயிர்களைக் காப்போம்!”

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad