• சற்று முன்

    காஞ்சிபுரம் அருகே ஓரிக்கை பகுதியில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி நகை பணம் கொள்ளை.


    10 சவரன் நகை, பத்தாயிரம் ரூபாய் ரொக்க பணத்தை மர்ம நபர்கள் பறித்திச் சென்றுள்ளனர். காஞ்சிபுரம் மாநகராட்சி ஓரிக்கை பகுதியில் வசிப்பவர்கள் சங்கர்- தீபா தம்பதியினர்,



    சங்கர் தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வரும் நிலையில் தீபா தனது குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் சென்று விட்டு,விட்டு வீட்டுக்கு வந்து தனியாக இருந்து உள்ளார். இந்நிலையில் வீட்டுக்குள் திடிரென நுழைந்த மர்ம நபர்கள் தீபாவை கத்தியை காட்டி மிரட்டி கட்டிப் போட்டுவிட்டு அவர் அணிந்திருந்த செயின் மற்றும் வீட்டில் இருந்த பத்தாயிரம் ரூபாய் பணத்தை பறித்துக் கொண்டு தப்பிச் சென்று உள்ளனர்.  மர்ம நபர்கள் தப்பி ஓடிய பின்னர் சிரமப்பட்டு கை கால் கட்டுகளை தீபா அவிழ்த்துக் கொண்டு அக்கம்பக்கத்தினரிடம் நடந்த விபரத்தை கூறியுள்ளார்.


    இச்சம்பவம் குறித்து காஞ்சிபுரம் தாலுகா காவல் நிலைய போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு ஆதாரங்களை சேகரித்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தீவிரமாக தேடும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.  பட்டப் பகலில் தனியாக இருந்த பெண்ணிடம் கத்தியைக் காட்டி மிரட்டி கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அந்தப் பகுதி மக்களிடம் பெரும் அச்சத்தையும்,பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad