• சற்று முன்

    முத்தியால்பேட்டையில் அரசு புறம்போக்கு நிலத்தில் ஆக்கிரமிப்பு: இறைச்சிக்கடையை அகற்ற கோரிக்கை


    முத்தியால்பேட்டையில் அரசு புறம்போக்கு நிலத்தில் ஆக்கிரமிப்பு: இறைச்சிக்கடையை அகற்ற கோரிக்கை பொதுமக்கள் போக்குவரத்துக்கும், சுடுகாட்டிற்கு செல்லவும் இடையூறு – கலெக்டரிடம் மனு


    காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் தாலுகா முத்தியால்பேட்டை இந்திரா நகர் பகுதியை சேர்ந்த முருகன் என்பவர், முத்தியால்பேட்டையில் அரசு புறம்போக்கு நிலத்தில் தனிநபர் ஆக்கிரமித்து அமைத்துள்ள இறைச்சிக்கடையை அகற்றக்கோரி காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் சினேகாவிடம் கோரிக்கை மனு அளித்துள்ளார்.

    காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் அவர் அளித்த மனுவில், முத்தியால்பேட்டை ஊராட்சிக்குட்பட்ட சர்வே எண் 27-ல் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தை ஏரிவாய் விநாயகமூர்த்தி என்பவர் ஆக்கிரமித்து இறைச்சிக்கடை அமைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

    இந்த ஆக்கிரமிப்பால் அப்பகுதியில் பொதுமக்களின் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதாகவும், முத்தியால்பேட்டை கிராமத்தில் ஏற்படும் உயிரிழப்புகளின்போது சுடுகாட்டிற்கு செல்வதற்கும் இந்த வழித்தடத்தையே பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார். எனவே, அரசு புறம்போக்கு நிலத்தில் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்பை அகற்றி, பொதுமக்கள் தடையின்றி பயன்படுத்தும் வகையில் பாதையை மீட்டுத்தர மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என முருகன் கோரிக்கை விடுத்துள்ளார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad