காட்டாங்குளத்தூர் டாக்டர் மங்களம் உயர்நிலைப்பள்ளியில் சிவானந்த குருகுலம் கலையரங்கில் 80 வது சுதந்திர தின கொண்டாட்டம்
செங்கல்பட்டில் நடைபெற்ற நமது நாட்டின் 80 வது சுதந்திர தின கொண்டாட்டம் காட்டாங்குளத்தூர் டாக்டர் மங்களம் உயர்நிலைப்பள்ளியில் சிவானந்த குருகுலம் கலையரங்கில் சிறப்பாக நடைபெற்றது.
இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கலைமாமணி விருது பெற்ற திரு அணில் ஸ்ரீனிவாசன் கலந்து கொண்டு தேசிய கொடியினை ஏற்றி வைத்து தேசிய மாணவர் படையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார் .
இதில் டாக்டர் மங்களம் உயர்நிலைப்பள்ளி மற்றும் சிவானந்த குருகுலத்தின் தாளாளர்கள் திருமதி லட்சுமி ராஜாராம் மற்றும் கிஷோர் குமார் ராஜாராம், பொருளாளர் திரு பந்து சந்தோக், பிரபல நரம்பியல் மருத்துவர் ராஜாராம், பள்ளி தலைமை ஆசிரியர்கள், பள்ளி மாணவர்கள் ,பெற்றோர்கள்ஆகியோர் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சிகளை தேசிய மாணவர் படை அலுவலர் கேவி.ஸ்ரீகுமார் மற்றும் பள்ளி ஆசிரியர் அலுவலர்கள் ஒருங்கிணைப்பில் வெகு விமர்சையாக நடைபெற்றது.
செய்தியாளர் விஜய் ராஜா






கருத்துகள் இல்லை