அமித்ஷாவின் தமிழக வருகையைக் கண்டித்துகாங்கிரஸ் கமிட்டி சார்பில் பள்ளிகொண்டா தேசிய நெடுஞ்சாலையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
நியாயமற்ற தொகுதி மறுவரையறை மற்றும் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய அமித்ஷாவின் தமிழக வருகையைக் கண்டித்து வேலூர் மத்திய மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் பள்ளிகொண்டா தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பேருந்து நிலையம் எதிரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
*ஆர்ப்பாட்டத்திற்கு வேலூர் மத்திய மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு.சுரேஷ்குமார் தலைமை தாங்கினார். அணைக்கட்டு வட்டார தலைவர் தாண்டவமூர்த்தி, வேலூர் மண்டல தலைவர் அரியூர் சோமு ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளிகொண்டா பேரூர் தலைவர் சிக்கந்தர் வரவேற்புரை ஆற்றினார். நிகழ்வில் மாநில பேச்சாளர் நாட்டாம்கார் அக்பர், மாவட்ட துணைத் தலைவர் சேகரன், மாவட்ட பொதுச் செயலாளர் பாரத். நவீன்குமார், மாவட்ட நெசவாளர் பிரிவு தலைவர் ஜெயவேல் ஆகியோர் கண்டன உரையாற்றினர். நிகழ்வில் வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் வீராங்கன், சங்கர், வழக்கறிஞர் செல்வக்குமார், மாவட்ட நிர்வாகிகள் இலியாஸ் பாஷா, அன்பரசி, உஷாராணி, சத்தியமூர்த்தி, மாசிலாமணி, செந்தில், மாவட்ட மகளிர் காங்கிரஸ் தலைவி கோமதி குமரேசன், மாவட்ட எஸ்ஸி பிரிவு தலைவர் அன்பரசன், RGPRS மாவட்ட தலைவர் ஆனந்தவேல், மாவட்ட மனித உரிமைப்பிரிவு தலைவர் யுவராஜ், மாவட்ட அமைப்புசாரா தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் காளியப்பன், மாவட்ட ஊடகப் பிரிவு தலைவர் ஆம்புலன்ஸ் ராஜேஷ், மாநில எஸ்ஸி பிரிவு பொதுச் செயலாளர்கள் சுப்பிரமணி, சுரேஷ், மாநில எஸ்ஸி பிரிவு செயலாளர் காத்தவராயன் மற்றும் மன்சூர் அஹ்மத், ஜூபேர், ரிஸ்வான், நஸ்ருல்லா, அஸ்கர், வலியுல்லா, அர்ஷத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவர் காமராஜ் நன்றியுரை கூறினார்
ஒருங்கிணைந்த மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே. சுரேஷ்குமார்.






கருத்துகள் இல்லை