காஞ்சிபுரத்தில் ஈ டர்ன் மோட்டார்ஸ் எல்எல்பி நிறுவனம் வழங்கும் பிகாஸ் இருசக்கர எலக்ட்ரிக் வாகனத்தின் புதிய ஷோரூம் திறப்பு விழா
காஞ்சிபுரத்தில் ஈ டர்ன் மோட்டார்ஸ் எல்எல்பி நிறுவனம் வழங்கும் பிகாஸ் இருசக்கர எலக்ட்ரிக் வாகனத்தின் புதிய ஷோரூம் திறப்பு விழா !!
அதிபர் வினோத் முன்னிலையில் துணை மேயர் குமரகுருநாதன் திறந்து வைத்தார்
காஞ்சிபுரம் மாவட்டம் செவிலிமேடு பகுதி அருகே ஈ டர்ன் மோட்டார்ஸ் எல்எல்பி நிறுவனம் வழங்கும் பிகாஸ் எலக்ட்ரிக் இருசக்கர வாகனத்தின் புதிய ஷோரூம் திறப்பு விழா நடைபெற்றது
திறப்பு விழாவில் ஈ டர்ன் மோட்டார்ஸ் எல்எல்பி நிறுவன அதிபர் ஜெ.வினோத் முன்னிலையில் காஞ்சிபுரம் மாநகராட்சியின் துணை மேயர் மற்றும் புகழ் பெற்ற ரமணாஸ் உணவகத்தின் உரிமையாளருமான மதிப்புக்குரிய ஆர்.குமரகுருநாதன் அவர்கள் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி குத்துவிளக்கு ஏற்றி புதிய பிகாஸ் எலக்ட்ரிக் இருசக்கர வாகனத்தின் புதிய ஷோரூம்மை திறந்து வைத்தார் இந்த புதிய பிகாஸ் எலக்ட்ரிக் இருசக்கர வாகனமானது ரூபாய் 88000 முதல் 1,40,000 ஆயிரம் வரை வாகனங்கள் விற்பனைக்கு உள்ளது மேலும் அனைத்து வாகனங்களும் உயர் தொழில்நுட்ப வசதிகள் கொண்ட ஐந்து வருட வாரண்டி உடன் லித்தியம் ஃபெரோ பாஸ்பேட் பேட்டரி இருக்கக்கூடிய இந்த வாகனத்தில் முழு சார்ஜ் நிரப்பப்பட்டால் குறைந்தபட்சம் 105 கிலோ மீட்டர் முதல் அதிகபட்சம் 145 கிலோ மீட்டர் வரை பயண செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டது மற்றும் இந்த நிறுவனம் சென்னை மேடவாக்கம், பெருங்களத்தூர் மற்றும் ராணிப்பேட்டை கலவை ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வருகின்றன . இந்த பிகாஸ் நிறுவனம் என்பது ஆர்ஆர் கேபிள் நிறுவனத்தின் ஒரு அங்கமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்ச்சியில் பிகாஸ் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் மண்டல மேலாளர் பாலகிருஷ்ணன்,
விற்பனை மேலாளர் சந்தோஷ், வங்கி பொது மேலாளர் சதீஷ், கோகுலம் சீட்ஸ் ஸ்ரீபெரும்புதூர் மேலாளர் சிவநாதன் உள்ளிட்ட காஞ்சிபுரத்தில் உள்ள தொழிலதிபர்கள் , அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.






கருத்துகள் இல்லை