காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் சினேகா தலைமையில் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் நடைபெற்ற விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் தி.சினேகா 10 விவசாய பயனாளிகளுக்கு ரூ.4.62 இலட்சம் மதிப்பீட்டில் பயிர்கடன் மற்றும் வேளாண் இடுபொருட்கள் வழங்கினார்கள்.
மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்ற விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டத்தில் வேளாண்மை துறை, வேளாண் பொறியியல் துறை, தோட்டக் கலைத்துறை,
கூட்டுறவுத் துறை, வருவாய்த் துறை, ஊரக வளர்ச்சித் துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட அனைத்து துறை சார்ந்த அலுவலர்களும் கூட்டத்தில் கலந்து கொண்டு வேளாண்மை திட்டங்கள் தொடர்பாக அறிவுரைகள் விவசாயிகளுக்கு வழங்கினார். மேலும் விவசாயிகளிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்களுக்கு துறை சார்ந்த அலுவலர்கள் விளக்கம் அளித்தனர்.காஞ்சிபுரம் மாவட்டத்தில் 2026 - ஆம் ஆண்டு ஜூலை மாதம் வரை கிடைக்க வேண்டிய சராசரி மழை அளவானது 219 மி.மீ ஆகும். இதுவரையில் கிடைக்கப்பெற்ற மழை 140.133 மி.மீ ஆகும். 63 சதவீதம் மழை பொழிவு கிடைக்க பெற்று உள்ளது என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. மேலும் கூட்டுறவு மற்றும் தனியார் விற்பனை நிலையங்களில் யூரியா உரங்கள் பூச்சி மற்றும் நோய் பயிர் பாதுகாப்பு மருந்துகள் இருப்புகள் போதிய அளவு உள்ளது என விவசாயிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து விவசாயிகள் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் விவசாயம் சார்ந்த கோரிக்கைகளை முன் வைத்தனர். விவசாயிகள் பயிர் காப்பீடு செய்வது இன்றோடு நிறைவடைகிறது இருந்தாலும் இணைய வசதியில் வேகம் குறைவாக இருப்பதால் நிறைய விவசாயிகள் காப்பீடு செய்ய காத்திருக்கின்றனர். ஆகவே இதன் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்தனர் இவற்றையும் இணை இயக்குனர் வேளாண்மை தெரிவிக்க கேட்டுக் கொண்டார். கூட்டுறவு சங்கங்களில் உரங்கள் தட்டுப்பாடு உள்ளது என தெரிவித்தனர். இணைப்பதிவாளர் கூட்டுறவு சங்கங்கள் இதன் மீது உரிய ஆய்வு செய்து விவசாயிகள் பிரச்சனைகளை தீர்வு காண மாவட்ட ஆட்சித் தலைவர் கேட்டுக்கொண்டார்.
உத்திரமேரூர் ஏரியின் தண்ணீர் அளவு குறைந்துள்ளதால் தூர்வார வேண்டும். மேலும் ஏரியன் 13 மதகுகளையும் சீரமைத்து மழைக்காலத்திற்குள் சீரமைத்து கொடுக்க வேண்டும் என விவசாயி தெரிவித்தார். நீர்வளத்துறை பொறியாளர் இது குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொண்டார். தற்பொழுது விவசாயிகள் நெல் அறுவடை பணிகளை தொடங்கியுள்ளனர். நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை தேவைப்படும் இடங்களில் திறக்க விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். நடப்பாண்டில் 60,000 மெட்ரிக் டன் அளவிற்கு விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்ய உத்தவேசிக்கப்பட்டுள்ளது. நடப்பு பருவத்தில் 10,000 மெட்ரிக் டன் கொள்முதல் செய்ய நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவுரையின்படி, அடுத்த வாரத்தில் இருந்து திறக்கப்படும். மேலும் விவசாயிகள் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விளைவிக்கும் நெல்லை போட எவ்வித பிரச்சினைகளும் அரசியல் தலையீடு இல்லாமல் செயல்பட நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவுரை வழங்கி உள்ளார். இவைகள் கட்டாயம் பின்பற்றப்படும் என தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர் விவசாயிகளுக்கு தெரிவித்தார். விவசாயிகள் தெரிவித்த பல்வேறு கோரிக்கைகள் மீது துறை சார்ந்த அலுவலர்கள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கவும் அடுத்த கூட்டத்திற்குள் பதில் அளிக்கவும் மாவட்ட ஆட்சித் தலைவர் கூட்டத்தில் தெரிவித்தார்.
தொடர்ந்து விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் உத்திரமேரூரை சேர்ந்த மாசிலாமணி இயற்கை விவசாயத்தை செய்து வருவதற்கு சான்றிதழ் வழங்கி, வேளாண்மை துறை மூலம் புள்ளலூர் கூட்டுறவு சங்கத்தின் மூலம் 5 விவசாய பயனாளிகளுக்கு ரூ. 4,61,131/- மதிப்பிலான பயிர் கடன்களும், 5 விவசாய பயனாளிகளுக்கு ரூ. 1,362/- மதிப்பிலான மானியத்துடன் கூடிய (மரக்கன்றுகள், நெல் நுண்ணூட்ட உரக்கலவை) வேளாண் இடுப்பொருட்கள் என மொத்தம் ரூ. 4,62,493/- மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
இக்கூட்டத்தில் வேளாண்மை இணை இயக்குநர் ஆர்.கிருஷ்ணவேணி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் கோ.யோக விஷ்ணு, காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர் (பொ) பாலகிருஷ்ணன், வேளாண்மை துணை இயக்குநர்/ மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வே) எஸ்.சுரேஷ், அரசு அலுவலர்கள் மற்றும் விவசாய பெருமக்கள் கலந்து கொண்டனர்.






கருத்துகள் இல்லை