காஞ்சிபுரம் மாவட்டம் மாநகராட்சி பகுதியில் தனியார் திருமண மண்டபத்தில் வீ த லீடர்ஸ் ஆலோசனை கூட்டம்
காஞ்சிபுரம் மாவட்டம் மாநகராட்சி பகுதியில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற வீ த லீடர்ஸ் ஆலோசனை கூட்டம் கேஎஸ்பாபுதலைமையில் சிறப்பு அழைப்பாளராக கரு.நாகராஜன் கலந்துகொண்டார்.
இதில் 200க்கும்மேற்பட்டோர் பங்கேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பின்போது கரு.நாகராஜன் பேசுகையில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை, ஐஏஎஸ் ஐபிஎஸ் மாநாட்டில் முதலமைச்சர் சட்டம் ஒழுங்கு குறித்து ஆலோசனை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தார். திமுக ஆட்சியில் வாங்கிய கடன் குறித்து மட்டுமே நிதி வெள்ளையறிக்கை உள்ளதே தவிர எப்படி தவறு நடந்துள்ளது எப்படி சரி செய்வது குறித்து அறிக்கையில் இல்லை. வெறும்வெள்ளை அறிக்கை மட்டும் மக்கள் எதிர்பார்க்கவில்லை என்பது சுட்டிக்காட்ட வேண்டும். ஆனால் மக்கள் வெள்ள அறிக்கையை எதிர்பார்க்கவில்லை, ஆண்டுக்கு 6 சிலிண்டரும், படித்த இளைஞர்கள் நிவாரண நிதியும் தான் எதிர்பார்க்கிறார்கள், தமிழகத்தில் இளைஞர் கட்சிக்கு தலைவர் என்றால் அது அண்ணாமலை மட்டும்தான் விஜய்53வயதில் தலைவர் ஆனார், உதயநிதி 55வயதுதலைவர் ஆனால் அண்ணாமலை4 2வயது தலைவராக இளைஞருக்கு வழிகாட்டியாக உருவாகியுள்ளார். ஜூலை 12க்குபிறகு அண்ணாமலை பல்வேறு சமூகவிழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பணியை தொடங்குகிறார். இடை தேர்தலில் பெரும்பான்மையான கட்சிகளை போட்டியிட தயங்குகிறது. ஏனென்றால் இடைத் தேர்தல் நியாயமாக நடக்கும் தேர்தல் அல்ல. அண்ணாமலை இயக்கம் நிச்சயம் இடைத்தேர்தலில் போட்டியிடும் என பாஜக முன்னாள் துணை தலைவர் கரு.நாகராஜன் காஞ்சிபுரத்தில் பேட்டி அளித்தார்.






கருத்துகள் இல்லை