• சற்று முன்

    சென்னை-பெங்களுரூ தேசிய நெடுஞ்சாலையில் தண்ணீர் டேங்க் லாரி மீது கன்டெய்னர் லாரி மோதி விபத்து.



    சென்னை-பெங்களுரூ தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சிபுரம் அடுத்த பாலுசெட்டி சத்திரம் அருகே பராமரிப்பு பணியில் ஈடுபட்டு வந்த தண்ணீர் டேங்க் லாரி மீது கன்டெய்னர் லாரி மோதி விபத்து.

    லாரியின் இடிபாடுகளில் சிக்கிய ஓட்டுநரை தீயணைப்புத் துறை நான் உதவியுடன் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட கண்டெய்னர் லாரி ஓட்டுனர் மருத்துவமனையில் அனுமதி

    சென்னை துறைமுகத்தில் இருந்து கார் உதிரி பாகங்களை எடுத்து கொண்டு சென்னை-பெங்களுரூ தேசிய நெடுஞ்சாலை வழியாக ஆந்திரா நோக்கி சென்ற கன்டெய்னர் லாரி சென்று கொண்டிருந்தது.அப்போது காஞ்சிபுரம் அடுத்த பாலுச்செட்டி சத்திரம் அருகே சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுவே தண்ணீர் பாய்ச்சி பராமரிப்பு பணி மேற்கொண்டு வந்த தண்ணீர் டேங்க்கர் லாரி மீது கண்டெய்னர் மோதி விபத்துக்குள்ளானது.

    இவ்விபத்தில் கன்டெய்னர் லாரி ஓட்டுனர் கார்த்தி சிக்கிய நிலையில் இது குறித்து காஞ்சிபுரம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறை வீரர்கள் லாரி ஓட்டுநர் கார்த்திக்-ஐ படுகாயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த விபத்தில் தண்ணீர் டேங்கர் லாரியின் சேஸ் உடைந்து சாலையின் தடுப்பு மீது ஏறி நின்றது எதிர்திசையில் லாரி செல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

    மேலும் இவ்விபத்தில் சிக்கிய லாரிகளை கிரேன் உதவியுடன் மீட்க்கப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டு இந்த விபத்தின் காரணமாக சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பும் பரபரப்பு ஏற்பட்டது.


    மேலும் விபத்து குறித்து பாலு செட்டி சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் கண்டெய்னர் லாரி ஓட்டுநர் தூக்க களத்தில் வாகனத்தை இயக்கியது தெரியவந்தது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad