• சற்று முன்

    VB-G-RAM-G திட்டத்தை மாண்புமிகு வனத்துறை அமைச்சர் ஆர்.வீ. இரஞ்சித்குமார் பணிகளை துவக்கி வைத்தார் .



    காஞ்சிபுரத்தில் 125 நாட்கள் வேலை உறுதியளிப்பு திட்டத்தை வனத்துறை அமைச்சர் ஆர்.வி.இரஞ்சித்குமார் துவக்கி வைத்தார்

    காஞ்சிபுரத்தில் உள்ள கிராமப்புறங்களில் விரிவு படுத்தப்பட்ட125 நாட்கள் வேலை உறுதி அளிப்பு திட்டத்தை, வனத்துறை அமைச்சர் ஆர். வி.இரஞ்சித்குமார் குருவிமலை  கிராமத்தில் நேற்று துவக்கி வைத்தார். 

    மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டம் இந்தியா முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மத்தியில் அப்போதைய காங்கிரஸ் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட இந்த திட்டம் கிராமப்புற ஏழை மக்களுக்கு பயனுள்ளதாக இருந்து வருகிறது. இந்த திட்டத்தை மத்தியில் ஆட்சிபுரியும் பா.ஜ.க.,அரசால் நிறுத்தப்படும் என, கடந்தாண்டு பரவலாக பேசப்பட்டு வந்தது.  இதற்கிடையில் 6 மாத காலமாக கிராமப்புற மக்களுக்கு ஊதியம் வழங்காமல் இழுத்தடிக்கப்பட்டது. போராட்டங்களும் நடத்தப்பட்டன. ஒரு வழியாக நிறுத்தப்பட்டிருந்த ஊதியம் கடந்த சட்டசபை தேர்தலுக்கு முன்பு கிராமப்புற மக்களுக்கு வழங்கப்பட்டது. தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு இந்த திட்டம் விரிவுபடுத்தப்படும் என, மத்திய - மாநில அரசுகள் அறிவித்தது. 100 நாட்களாக இருந்த வேலை உறுதி அளிப்பு திட்டம், 125 நாட்களாக செயல்படுத்தப் படும் என, அதிகாரப்பூர்வமாக அறிவிப்பையும் வெளியிட்டப்பட்டது. 

    இதற்கான துவக்க விழா நேற்று தமிழக முழுவதும் நடந்தது. காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் அடுத்த குருவிமலை கிராமத்தில் நடந்த துவக்க விழாவிற்கு வனத்துறை அமைச்சர் ஆர்.வி.இரஞ்சித்குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, கிராமப்புற மக்கள் முன்னிலையில் 125 நாட்கள் வேலை உறுதி அளிப்பது திட்டத்தை துவக்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் கூடுதல் கலெக்டரும் - மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனருமான ஆஷிக் அலி, மாநகர செயலாளர் மொய்தீன் மற்றும் அரசு அலுவலர்கள் பொது மக்கள் என, பலரும் கலந்து கொண்டனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad