• சற்று முன்

    கோவில்பட்டியில் பைக் டாக்ஸியை கண்டித்து ஆட்டோ ஓட்டுனர்கள் சார்பில் கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம்.


    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தனியார் பைக் டாக்ஸி தற்போது அறிமுகம் செய்யப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. இந்நிலையில் கோவில்பட்டியில் உள்ள ஆட்டோ ஓட்டுனர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து மிகவும் கஷ்டப்பட்டு வருகின்றனர். இந்த டாக்ஸியில் விலை மிகவும் குறைவாக உள்ளதால் ஆட்டோ தொழில் கடுமையாக பாதிப்பதாக கூறி  கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஆட்டோ ஓட்டுனர் கொம்பையா தலைமையில் கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆட்டோ ஓட்டுநர்கள் சங்க நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad