• சற்று முன்

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் நடைபெற்ற மாபெரும் வேலை வாய்ப்பு முகாமில் தேர்வு பெற்று பணி நியமன ஆணையினை பெற்றவர்கள்மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்குநன்றியினை தெரிவித்துக் கொண்டார்கள்.



    தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், அனைத்து தரப்பு மக்களும் பயன்பெற வேண்டும் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்று பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் கோபிசெட்டிபாளையத்தில் கடந்த (25.7.2026) அன்று நடைபெற்ற முகாமில் 332 முன்னணி தனியார் நிறுவனங்கள் பங்கேற்றது. இதில் பொதுப்பிரிவைச் சேர்ந்த 8,613 பேரும், மாற்றுத்திறனாளிகள் 55 பேரும் என மொத்தம் 8,668 வேலைநாடுநர்கள் கலந்து கொண்டனர். இவர்களில் பொதுப்பிரிவைச் சேர்ந்த 2,749 பேரும், மாற்றுத்திறனாளிகள் 25 பேரும் என மொத்தம் 2,774 வேலை நாடுநர்கள் பணிக்குத் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் திரு.கே.ஏ.செங்கோட்டையன் அவர்கள் மற்றும் மாண்புமிகு கைத்தறி, துணிநூல் மற்றும் காதித்துறை அமைச்சர் திரு.ம.விஜய் பாலாஜி அவர்கள் ஆகியோர் பணிநியமன ஆணை வழங்கினார்கள்.



    மாபெரும் தனியார்த்துறை வேலை வாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு

    பணிநியமன ஆணைப்பெற்ற திரு.ஜி.எஸ்.ஹரிஹரன் மகிழ்ச்சியுடன் தெரிவித்தாவது 

    நான் ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையத்தில் வசித்து வருகிறேன். எனது தந்தை திரு.செந்தில்குமார். எனது தந்தை நான் 7-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது (2016-ஆம் ஆண்டு) காலமானார். எனது தாயார் திருமதி.தமிழ்ச்செல்வி தையல் தொழில் செய்து குடும்பத்தைப் பராமரித்து வருகிறார். தந்தையின் மறைவிற்குப் பிறகு பல்வேறு சிரமங்களை எதிர்கொண்ட போதிலும், எனது தாயாரின் அயராத உழைப்பும் ஊக்கமும் காரணமாக எனது உயர்கல்வியை (எம்.பி,ஏ) தொடர்ந்து வெற்றிகரமாக முடித்தேன். கல்வியை முடித்த பின்னர், குடும்பத்தின் பொருளாதார சூழ்நிலை காரணமாக எனது கல்வித் தகுதிக்கேற்ற வேலைவாய்ப்பைத் தேடி பல்வேறு இடங்களுக்குச் சென்றேன். ஆனால், உரிய வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை. அப்போது மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெற்ற மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் குறித்து அறிந்து அதில் கலந்து கொண்டேன். இந்த முகாமில் ஒரே இடத்தில் பல முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று நேர்காணல் நடத்தியது எனக்கு மிகுந்த நம்பிக்கையை அளித்தது. நடைபெற்ற நேர்காணலில் வெற்றி பெற்று, எனது திறமைக்கேற்ற நிறுவனத்தில் பணிநியமன ஆணையை மாண்புமிகு அமைச்சர் பெருமக்களின் திருக்கரங்களால் பெற்றுக்கொண்டேன். தற்போது ஜெனி மேக்னெட் நிறுவனத்தில் உள்ளடக்க எழுத்தாளராக (Content Writer) தேர்வு செய்யப்பட்டுள்ளேன். இப்பணியில் எனக்கு மாதம் ரூ.19,000 ஊதியம் வழங்கப்படுகிறது. இந்த வேலைவாய்ப்பின் மூலம் எனது குடும்பத்தின் எதிர்காலம் குறித்த கவலை பெருமளவில் குறைந்துள்ளது. வேலைவாய்ப்புடன் மட்டுமல்லாமல், இளைஞர்களின் திறன்களை மேம்படுத்தும் பயிற்சிகள் மற்றும் தொழில்வழிகாட்டுதல்களையும் வழங்கி வரும் தமிழ்நாடு அரசின் இந்த முயற்சி மிகவும் பாராட்டத்தக்கது. இளைஞர்களின் வாழ்க்கையில் நம்பிக்கையையும், வேலைவாய்ப்பையும் உருவாக்கி வரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும், இம்மாபெரும் வேலைவாய்ப்பு முகாமை சிறப்பாக நடத்தி எங்களைப் போன்ற இளைஞர்களுக்கு புதிய வாழ்வாதாரத்தை உருவாக்கிய மாண்புமிகு அமைச்சர் பெருமக்களுக்கும் மாவட்ட நிர்வாகம் மற்றும் அனைத்து அலுவலர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.



    மாபெரும் தனியார்த்துறை வேலை வாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு

    பணிநியமன ஆணைப்பெற்ற செல்வி ச.மோனிஷா மகிழ்ச்சியுடன் தெரிவித்தாவது 


    நான் ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் வட்டம், டி.என்.பாளையம் ஒன்றியம், அரக்கன்கோட்டை பகுதியில் வசித்து வருகிறேன். எங்கள் குடும்பத்தில் எனது பெற்றோர் மற்றும் இரண்டு தங்கைகள் உள்ளனர். எனது முதல் தங்கை 11-ஆம் வகுப்பிலும், இரண்டாவது தங்கை 4-ஆம் வகுப்பிலும் படித்து வருகின்றனர். எனது தந்தை வாகன ஓட்டுநராகப் பணிபுரிந்து வருகிறார். நான் நீண்ட நாட்களாக எனது கல்வித் தகுதிக்கேற்ற வேலைவாய்ப்பை எதிர்பார்த்து வந்தேன். கடந்த சனிக்கிழமை (25.07.2026) நடைபெற்ற மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு, நேர்காணலில் வெற்றி பெற்று பணிநியமன ஆணையை பெற்றது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் தன்னம்பிக்கையையும் அளித்துள்ளது. நான் சிப்காட் தொழிற்சாலை வளாகத்தில் செயல்பட்டு வரும் பிரிட்டானியா பிஸ்கட் நிறுவனத்தில் கணினி இயக்குபவராக தேர்வு செய்யப்பட்டுள்ளேன். இப்பணியில் எனக்கு மாதம் ரூ.16,000 ஊதியம் வழங்கப்படுகிறது. ஒரே இடத்தில் பல முன்னணி தனியார் நிறுவனங்கள் பங்கேற்று ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கும் வகையில் இந்த முகாம் நடத்தப்பட்டிருப்பது மிகவும் பயனுள்ள முயற்சியாகும். இதுபோன்ற முகாம்கள் வேலைதேடும் இளைஞர்களின் நேரத்தையும் செலவையும் மிச்சப்படுத்துவதோடு, தங்களது திறமையை வெளிப்படுத்த சிறந்த வாய்ப்பையும் வழங்குகின்றன. இளைஞர்களின் வேலைவாய்ப்பை உறுதி செய்து, அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும், இந்நிகழ்வில் கலந்து கொண்டு பணிநியமன ஆணைகளை வழங்கிய மாண்புமிகு அமைச்சர் பெருமக்களுக்கும், மாவட்ட நிர்வாகம் மற்றும் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்தார்.

    இவர்களை போன்ற இளைஞர்கள் தங்களது கல்வித் தகுதி, திறன் மற்றும் விருப்பத்திற்கு ஏற்ற பணிகளை ஒரே இடத்தில் தேர்வு செய்து கொள்ளும் வகையில் இத்தகைய வேலைவாய்ப்பு முகாம்கள் சிறப்பாக அமைந்துள்ளன. அதேபோல், தொழில் நிறுவனங்களும் தங்களுக்குத் தேவையான திறமையான மனிதவளத்தை நேரடியாகத் தேர்வு செய்து கொள்ளும் வாய்ப்பைப் பெறுகின்றன. எனவே, இத்தகைய வேலைவாய்ப்பு முகாம்கள் இளைஞர்களுக்கும் தொழில் நிறுவனங்களுக்கும் பயனளிக்கும் சிறந்த தளமாக விளங்கி வருகின்றன.


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad