• சற்று முன்

    அம்மாபேட்டை காவல் நிலையம் 34 கிலோ குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு இரண்டு நபர்கள் கைது


    ஈரோடு மாவட்டத்தில் சட்ட விரோத செயல்களை கட்டுப்படுத்தும் நோக்கில் ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் நேரடி பார்வையில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது இந்நிலையில் இன்று 25 7 2026 ஆம் தேதி ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோணகிரி பட்டி முதல் பவானி ரோடு சூடமுத்தான்பட்டி பகுதியில் சட்டவிரோதமாக குட்கா பதுக்கி வைத்திருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது.

    ரகசிய தகவலின் அடிப்படையில் அம்மாபேட்டை காவல் நிலைய போலீசார் சோதனை மேற்கொண்டதில் குட்காவை சட்ட விரோதமாக பதுக்கி வைத்திருந்த முனுசாமி  (வயது 50) மற்றும் செந்தில்குமார் (வயது 38 )ஆகியோரை கைது செய்து அவர்களிடமிருந்து ரூபாய் 1, 72782 மதிப்புள்ள 34 குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள், இரண்டு சக்கர வாகனங்கள் மற்றும் ஒரு செல்போன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு வழக்கு பதிவு செய்து எதிரிகளை நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad