• சற்று முன்

    காஞ்சிபுரம் முருகன் பட்டு கூட்டுறவு சங்கத்தில் பணியாற்றி உடல்நல குறைவால் விடுமுறை எடுக்கப்பட்ட நிலையில் மீண்டும் பணி வழங்க லஞ்சம் கேட்கும் அதிகாரி



    காஞ்சிபுரம் முருகன் பட்டு கூட்டுறவு சங்கத்தில் பணியாற்றி உடல்நல குறைவால் விடுமுறை எடுக்கப்பட்ட நிலையில் மீண்டும் பணி வழங்க லஞ்சம் கேட்கும் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க கோரி மாற்றுத்திறனாளியாக மாற்றப்பட்ட நபர் வீல் சேருடன் வருகை தந்து மாவட்ட ஆட்சியிடம் மனு அளித்தார் 


    காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்த முத்து குமார் என்பவர் தனது 2012 ஆம் ஆண்டு முருகன் பட்டு கூட்டுறவு சங்கம் சென்னையில் உள்ள கிளையில் தினக்கூலி அடிப்படையில் உதவி விற்பனையாளராக பணிபுரிந்து வந்த நிலையில் 2015 ஆம் ஆண்டு கைத்தறி இயக்குனர் உத்தரவின் படி தினக்கூலியிலிருந்து தொகுப்பூதிய பணியாளராக பணியாற்றப்பட்டு பணியாற்றி வந்தார். 

    கடந்த 2020 ஆண்டு ஜனவரி 17 அன்று திடீரென உடல்நிலை குறைவால் சக்கரை நோயால் அவதிப்பட்டு வந்து மோசமான நிலையில் இடது கால் பாதிப்பு அடைந்ததால் சங்கத் தலைமையகத்தில் கடிதம் மூலம் மருத்துவ விடுப்பில் சென்ற நிலையில் 2020 ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஜூன் மாதம் வரை தொடர்ச்சியாக சிகிச்சையில் இருந்து வந்துள்ளனர். 

    ஜூன் மாதம் பிறகு பணிக்கு தொடர்வதற்காக எனக்கு வழங்க வேண்டிய சம்பளம் பாக்கி வழங்க கோரி நேரில் சந்தித்து கேட்ட பொழுது பத்து மாதங்களாக பணிக்கு வராததை தொடர்ந்து பணியிலிருந்து நீக்கிவிட்டதாக வாய்மொழி உத்தரவை வைத்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

    அப்பொழுது கூடுதல் பொறுப்பில் இருந்த மேலாண்மை இயக்குனர் தமிழரசி அவர்களை கேட்ட பொழுது இனி பணிக்கு வர தேவையில்லை உன்னை பணியில் இருந்து நீக்கி விட்டதாகவும் கடைசியில் வேண்டுமானால் ஒரு லட்சம் லஞ்சம் கொடு பணி வழங்க ஆவணம் செய்கிறேன் என கூறியதாக மாற்றுத்திறனாளி தெரிவித்துள்ளார். 

    பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி மருத்துவ செலவிற்காக பணம் செலவானது தொடர்ந்து என்னால் ஒரு லட்ச ரூபாய் லஞ்சம் கொடுக்க முடியாத காரணத்தால் உன்னால் முடிந்ததை பார்த்துக் கொள் என மேலாண்மை இயக்குனர் தமிழரசி கூறியதாக கூறப்படுகிறது 

    இது குறித்து தனிப்பட்ட முறையில் வழக்கு பதிவு செய்து நீதிமன்றம் முறையிட்ட பொழுது ஆய்வின் போது சங்கத்தில் பணியாற்றிய எந்த ஆவணங்களும் இல்லை எனவும் சங்கத்திற்கும் மாற்றுத்திறனாளிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என மேலாண்மை இயக்குனர் முருகன் பட்டு கூட்டுறவு சங்கத்தில் ஆய்வில் நடந்ததாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். 

    ஆனால் விசாரணையில் 2018 ஆம் ஆண்டு என் பெயரில் 40 ஆயிரத்துக்கு மேல் தொகை இருந்ததை தணிக்கை அறிக்கையில் உள்ளதாக அறிந்து கொண்டு என் மீது கால் முயற்சி காரணமாக மேலாண்மை இயக்குனர் தமிழரசி தாங்களாகவே எனக்கு வழங்கிய பணியாளர் அட்டையையும் வழங்கியுள்ளார். 

    உடல் நலக்குறைவால் மருத்துவம் சென்று சிகிச்சை பெற்று ஒரு லட்ச ரூபாய் வழங்க முடியாத காரணத்தால் அன்று மனநோயாளியாக இருந்த நான் என்று மாற்றுத்திறனாளியாக பாதிப்படைந்ததை சுட்டிக்காட்டி மிகவும் வறுமையில் இருப்பதாகவும் தயவு கூர்ந்து தங்கள் மேலான கருணை உள்ளத்தில் மூலம் யார் மீது தவறு உள்ளதா என ஆய்வு செய்து அதனை சரி செய்து எனக்கு மீண்டும் பணி வழங்க வேண்டுமெனவும் மேற்கண்ட பணி நீக்க கால சம்பளமும் பிஎஃப் போன்றவை பெற்றுத்தரகோரி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மாற்றுத்திறனாளி குடும்பத்தாருடன் வருகை தந்து மனு அளித்து நடவடிக்கை எடுக்க கோரி கேட்டுக்கொண்டார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad