• சற்று முன்

    காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் தி.சினேகா தலைமையில் மாவட்டக் கல்வி மீளாய்வுக் கூட்டம் நடைபெற்றது.


    காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில், மாவட்ட ஆட்சித்தலைவர் தி.சினேகா தலைமையில் மாவட்டக் கல்வி மீளாய்வுக் கூட்டம் நடைபெற்றது.


    இக்கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறையில் பல்வேறு  உட்கூறுகள் சார்ந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் முடிக்கப்படாமல் உள்ளதற்கும் அது சார்ந்த பிற துறை அலுவலர்களுடன் விவாதிக்கப்பட்டது, பள்ளியின் EMIS வருகைப் பதிவு குறைவாக உள்ள பள்ளிகள் மற்றும் இடை நிற்றலுக்கு வாய்ப்பு உள்ள குழந்தைகள் ஆகியவர்கள் விவரம் பற்றி விவாதிக்கப்பட்டது, 2025-26 ஆம் கல்வியாண்டில் பன்னிரண்டாம் வகுப்பு பயின்ற மாணவர்கள் உயர்கல்வி பயில்வதை உறுதி செய்யும் பொருட்கள் சிறப்பு குறை தீர்ப்பு கூட்டம் 29-07-2026 அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற உள்ளது. இதில் உயர்கல்வி சேராத மாணவர்கள் பயன்பெற கேட்டுக் கொள்ளப்பட்டது, பள்ளியில் பயிலும் மாணவர்களின் பிறப்புச் சான்றிதழ் இல்லாத மாணவர்களுக்கு வழிவகை செய்யப்பட்டது பற்றி விவாதிக்கப்பட்டது,

     நடப்பு கல்வி ஆண்டில் பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு உயர் கல்வி பயில்வதற்காக வெற்றி பள்ளிகள் நிகழ்வு அனைத்து சனிக்கிழமைகளில் குறிப்பிட்ட மையங்களில் நடைபெறுகின்றது. இப்பயிற்சிகளில் மாணவர்கள் பங்கு பெற்று பயனடைய கேட்டுக் கொள்ளப்பட்டது.


    இக்கூட்டத்தினை தொடர்ந்து 2024-2025 ஆம் கல்வி ஆண்டில் சிறந்து  விளங்கிய   10ஆம் வகுப்பு மாணவர்கள் 15 மாணவர்களுக்கு ரூ.10,000/- ரொக்கப் பரிசும் 12ஆம் வகுப்பு  மாணவர்கள் 15 மாணவர்களுக்கு ரூ.15,000/- ரொக்கப் பரிசும்  மாவட்ட ஆட்சித்தலைவர் தி.சினேகா வழங்கினார்கள். மேலும்  ஒவ்வொரு பள்ளியிலும்  மாணவர்கள் கோடை விடுமுறையில்  புத்தகங்கள்  படித்து, அப்புத்தகத்தில்  இருந்து  புத்தக விமர்சனப்  போட்டிகள்  பள்ளி  அளவில்  ஜூன்  முதல்  வாரம்  நடைபெற்றது. பின்பு  வட்டார  அளவிலான  போட்டிகள்  நடைபெற்றன. வட்டார  அளவில்  வெற்றி பெற்ற மாணவர்களுக்கு  கல்வி வளர்ச்சி  நாளன்று  15.07.2026 மாவட்ட  அளவிலான  போட்டிகள்  நடைபெற்றன.  மாவட்ட  அளவில். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மாவட்ட  மாவட்ட ஆட்சித்தலைவர் தி.சினேகா பாராட்டு சான்றிதழ்  மற்றும் புத்தகங்கள்  வழங்கினார்.

    இந்நிகழ்வில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி), மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை ஆஷிக் அலி, முதன்மைக் கல்வி அலுவலர் அ.நளினி, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் எல்.தனலெட்சுமி, இடைநிலை கல்வி அலுவலர் காந்திராஜன், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் எஸ். எழில், தனியார் கல்வி அலுவலர் கோமதி, ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் மாணவ,மாணவியர்கள்  கலந்து கொண்டனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad