காஞ்சிபுரம் அருள்மிகு குளக்கரை மாரியம்மன் ஆலயத்தில் திருவிளக்கு பூஜை நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்பு.
காஞ்சிபுரம் அருள்மிகு குளக்கரை மாரியம்மன் ஆலயத்தில் திருவிளக்கு பூஜை நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்பு. காஞ்சிபுரம் சாலை தெருவில் அமர்ந்த அருள் பாதித்து வரும் பழமை வாய்ந்த அருள்மிகு குளக்கரை மாரியம்மன் ஆலயத்தில் ஆடித்திருவிழா விமர்சையாக தொடங்கியது இதில் முதல் நாள் உலக மக்கள் நன்மை கருதியும் ஆரோக்கிய வாழ்வு பெறவும் சகல சௌபாக்கியங்கள் பெற்றிடவும் வேண்டி திருவிளக்கு பூஜை நடைபெற்றது
இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு அம்மன் பாடல்கள் குங்கும அர்ச்சனை மற்றும் தீபாரதனைகள் நெய்வேத்தியங்கள் சமர்ப்பித்து வழிபாடு செய்தனர் இதனைத் தொடர்ந்து அனைவரும் அம்பாளை தரிசனம் செய்து சென்றனர் கலந்து கொண்ட பெண்கள் அனைவருக்கும் மஞ்சள் குங்குமம் ரவிக்கை உள்ளிட்ட பிரசாதங்களும் வழங்கப்பட்டது விழா ஏற்பாடுகளை சாலை தெரு லிங்கப்பன் தெரு சாத்தான்குட்டை தெரு அன்பர்கள் மற்றும் பொதுமக்கள் ஆலய நிர்வாக குழுவினுடன் இணைந்து சிறப்பாக செய்திருந்தனர்






கருத்துகள் இல்லை